ரயிலில் பயணம் செய்யும் முன்பு, முதலில் இந்த பட்டியலை சரிபார்த்துக் கொள்ளவும்

நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தால், முதலில் கண்டிப்பாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலைக் (Canceled trains list) குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.

Written by - ZEE Bureau | Last Updated : Jul 30, 2021, 05:52 PM IST
  • தென்கிழக்கு ரயில்வே சில ரயில்களை ரத்து செய்துள்ளது.
  • பல மாவட்டங்கள் கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
  • முதலில் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலைக் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.
ரயிலில் பயணம் செய்யும் முன்பு, முதலில் இந்த பட்டியலை சரிபார்த்துக் கொள்ளவும்

இந்தியன் ரயில்வே செய்திகள்: கொல்கத்தா (Kolkata), ஹவுரா மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கம் ஏற்பட்டு, அதிக அளவில் நீர் தேங்கி உள்ளதால், அதன் காரணமாக தென்கிழக்கு ரயில்வே சில ரயில்களை ரத்து செய்துள்ளது. இந்த பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக ரயில்கள் நிலையங்களில் நீர் தேங்கியதால் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா உட்பட மாநிலத்தின் பல மாவட்டங்கள் கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஹவுரா ரயில் நிலையத்தின் (Howrah railway station) ரயில் பாதையில் மழை நீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக சில பாதைகளில் ரயில்கள் இயக்க முடியாதா சூழல் ஏற்பட்டுள்ளது. ஹவுராவில் இருந்து இயக்கப்படும் பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களில் இயக்கப்பட இருந்தா மொத்தம் 12 ரயில்களை தென்கிழக்கு ரயில்வே (South Eastern Railway) ரத்து செய்துள்ளது.

நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தால், முதலில் கண்டிப்பாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலைக் (Canceled trains list) குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.

ALSO READ | IRCTC வழங்கும் 'Alert' சேவை; இனி கன்பர்ம் டிக்கெட் பெறுவது மிக எளிது..!!!

ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் எப்பொழுது இயக்கப்படும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இது மழை மற்றும் வானிலை சார்ந்தது என்றாலும். பயணிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

canceled trains list

எந்த தேதியில் எந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே தெரிவித்துள்ளது. முன்னதாக மகாராஷ்டிராவிலும் கனமழை (Heavy Rains) காரணமாக 48 ரயில்களை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. அதனுடன் 33 ரயில்களின் பாதையும் மாற்றப்பட்டது.

அதேபோல செங்கோட்டை டூ சென்னை எழும்பூர் (Chennai Egmore) வரை வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிலம்பு சிறப்பு ரயில் (Silambu Express) வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் வியாழன், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்பட இருக்கிறது. தற்பொழுது இந்த சிறப்பு ரயில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என வாரம் 3 முறை செங்கோட்டையில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

அதே போல சென்னை எழும்பூர் டூ  செங்கோட்டை (sengottai) வரை வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டு வரும் இந்த சிறப்பு ரயில், செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்பட இருக்கிறது.

ALSO READ | 7th pay commission: ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் நல்ல செய்தி என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News