திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாச்சலபதிக் கோவிலில் இந்த ஆண்டு பிரம்மோத்சவம் வழக்கத்தில் இருந்து சற்று மாறுபட்டுள்ளது. இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோவிந்தனின் ஆலய வளாகத்திற்கு உள்ளேயே புரட்டாசி மாத பிரம்மோற்சவ வைபவம் நடைபெறுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வழக்கமாக திருப்பதி மலைக் கோவிலின் மாடவீதிகளில் பிரம்மாண்டமான அளவில் ஏழுமலையானின் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் கொரோனா நோய்த்தொற்று தாக்கத்தால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது வழக்கமான நடைமுறைகளை சற்றே மாற்றியமைத்துள்ளது.
எனவே, கோலாகலமான கொண்டாட்டம், காலையிலே களைகட்டும் கலை நிகழ்ச்சிகள், தேர் ஊர்வலம் என எந்தவிதமான நிகழ்சிகளும் இல்லாமல் ஏழுமலையானின் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை இந்த ஆண்டு பிரம்மோத்சவ திருவிழா நடைபெறுகிறது. 
பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட வாகன சேவை 23ஆம் தேதி நடைபெறும். அன்று ஆந்திர மாநில அரசு சார்பில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சாத்துகிறார்.



உலகிலேயே பழைமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் இந்த திருமலை மலைகள் தான். திருப்பதியின் பழைய பெயர் திருவேங்கடம். 
திருப்பதி ஆலயம் எந்த ஆண்டில் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் இது பல பேரரசுகளால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. முதன்முதலில் கருணாகரத் தொண்டைமான் என்ற பல்லவ மன்னரால் இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்பது பரவலான நம்பிக்கை.  
வைணவம் பெரிதாக பின்பற்றப்பட்ட காலத்தில் திருப்பதியை கலியுக வைகுண்டம் என்று ஆழ்வார்கள் போற்றினார்கள். வைணவ சம்பிரதாயத்தில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக விளங்குவது திருப்பதி ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது. பதினோராம் நூற்றாண்டில் இந்தக் கோவிலின் ஆச்சார அனுஷ்டானங்கள் ராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டன.


Read Also | இந்து இறையியலில் யாகத்தின் முக்கியத்துவம் என்ன?.. அது எவ்வளவு சக்தி வாய்ந்தது?