30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு கிரகத்தின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தென்படும். ராசியின் மாற்றம் அல்லது சனி பெயர்ச்சி சிலருக்கு நல்ல பலனை தரும், அதேசமயம் சிலருக்கு அசுப பலனை தரலாம்
ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு கிரகத்தின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தென்படும். ராசியின் மாற்றம் அல்லது சனி பெயர்ச்சி சிலருக்கு நல்ல பலனை தரும், அதேசமயம் சிலருக்கு அசுப பலனை தரலாம். சனி பகவான் கர்மதாதா அல்லது நீதியின் கடவுள் என்று அறியப்படுகிறார். சனி பகவான் ஒரு நபரின் நல்ல மற்றும் கெட்ட செயல்களின் கணக்கை வைத்திருப்பார். மேலும் அவரது கூற்றுப்படி அவர்களுக்கு சுப மற்றும் அசுப பலன்களை வழங்குவார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் தனது ஜென்ம ராசியான கும்பத்தில் நுழையப் போகிறார். சனியின் இந்த ராசி மாற்றம் ஏப்ரல் 29ம் தேதி நிகழவுள்ளது. சனியின் இந்த சஞ்சாரத்தின் பலன் பல ராசிகளில் காணப்படும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசை பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும்
இந்த இரண்டு ராசிகளில் சனி தசை தொடங்குவார்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனிபகவான் கும்ப ராசியில் சஞ்சரித்தவுடன் சனி திசை இரண்டு ராசிகளில் தொடங்கும். கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி தசை தொடங்கும், இது ஜூலை 12 வரை இருக்கும்.
ஏழரை நாட்டு சனி இந்த ராசிக்காரர்கள் மீது இருக்கும்
இந்து பஞ்சாங்கத்தின் படி, 2022 ஏப்ரல் 29 வரை, தனுசு, மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தால் அவதிப்படுகிறார்கள். மேலும் ஏப்ரல் 29ம் தேதிக்கு பிறகு சனி கும்ப ராசியில் நுழைந்தவுடன் மீன ராசியில் ஏழரை நாட்டு சனி தொடங்கும். அதே சமயம் தனுசு ராசிக்காரர்கள் இதிலிருந்து சில காலம் விடுதலை பெறுவார்கள்.
அதன் இறுதிக் கட்டம் மகர ராசிக்காரர்களிடமும், இரண்டாம் கட்டம் கும்ப ராசிக்காரர்களிடமும் தொடங்கும். அதனால் இந்த ராசிக்காரர்கள் சில உடல் வலிகளை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | பிப்ரவரி 19 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: 30 நாட்களுக்கு இக்கட்டான நிலை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR