இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும்

தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி பெரும் பண பலன்களைத் தரும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 12, 2022, 08:48 AM IST
  • பிப்ரவரி 26 அன்று மீண்டும் ஒரு பெரிய மாற்றம் நிகழப் போகிறது.
  • செவ்வாய் மேஷ ராசிக்கு அதிபதி
  • மீன ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்
இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் title=

புதுடெல்லி: வேத ஜோதிட சாஸ்திரப்படி, 9 கிரகங்களும் அவ்வப்போது தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டே இருக்கும். இது மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. பிப்ரவரி 26 அன்று மீண்டும் ஒரு பெரிய மாற்றம் நிகழப் போகிறது. கிரகங்களின் அதிபதியான செவ்வாய் மகர ராசியில் பிரவேசிக்க உள்ளார். இந்த செவ்வாய் சஞ்சாரம் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். இந்த மாற்றம் இவர்களுக்கு பெரும் பண பலன்களை தரும்.

மேஷம்: மகர ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது மேஷ ராசியினருக்கு மிகவும் சாதகமாக அமையும். செவ்வாய் மேஷ ராசிக்கு அதிபதியாக இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். பணம் சம்பாதிப்பார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், அது எதிர்காலத்தில் பெரிய பலனைத் தரும்.

மேலும் படிக்க | பிப்ரவரி 19 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: 30 நாட்களுக்கு இக்கட்டான நிலை

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மாற்றம் அதிர்ஷ்டத்தை தரும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். திடீரென்று எங்கிருந்தோ பணம் வரும். இது பழைய கடனை அடைக்க உதவும். ஒட்டுமொத்த நேரம் நன்றாக இருக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலை-வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பதவி உயர்வு ஏற்படலாம். வருமான உயர்வால் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி பெரும் பண பலன்களைத் தரும். குறிப்பாக கலைத்துறையுடன் தொடர்புடையவர்கள் பெரிதும் பயனடைவார்கள். வியாபாரிகளும் அதிக லாபம் அடைவார்கள்.

மீனம்: செவ்வாய் மகர ராசியில் நுழைவதால் மீன ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நிதி நிலை வலுவடையும். நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News