மே மாதம் முடிந்து ஜூன் மாதம் விரைவில் துவங்கவுள்ளது. இந்த முறை ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து பல பெரிய மாற்றங்கள் நிகழவுள்ளன. இந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையையும் உங்கள் நிதி நிலையையும் நேரடியாக பாதிக்கும். ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், உங்களை நேரடியாக பாதிக்கும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விகிதங்களில் உயர்வு


நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கியால் (எஸ்பிஐ) வீட்டுக் கடனுக்கான எக்ஸ்டெண்டட் பெஞ்ச்மார்க் கடன் விகிதம் (EBLR) 7.05 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதம் (ஆர்எல்எல்ஆர்) 0.40 சதவீதம் அதிகரித்து 6.65 சதவீதமாக உள்ளது. எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் ஜூன் 1 முதல் அமலுக்கு வரும்.


காப்பீட்டு பிரீமியம் அதிகரிப்பு


சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, ஜூன் 1 முதல் கார்கள் மற்றும் பைக்குகளின் காப்பீடு விலை உயரும். தர்ட் பார்டி வாகன காப்பீட்டுக்கான பிரீமியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அரசின் இந்த முடிவுக்குப் பிறகு, காரின் எஞ்சின் திறனுக்கு ஏற்ப பிரீமியம் செலுத்த வேண்டும். உதாரணமாக, இப்போது 1000 சிசி இன்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் ரூ.2,094 ஆக இருக்கும். ஜூன் 1 முதல் இரு சக்கர வாகனங்களின் காப்பீட்டு பிரீமியமும் அதிகரிக்கப்படும்.


மேலும் படிக்க |எல்பிஜி சிலிண்டர் மானியம்; புதிய விதிகளை அறிந்து கொள்ளவும் 


தங்கத்திற்கு ஹால்மார்கிங் அவசியம்


ஜூன் 1-ம் தேதி முதல் தங்கம் ஹால்மார்க்கிங் இரண்டாம் கட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த மாற்றத்துடன், பழைய 256 மாவட்டங்களிலும் மற்ற 32 மாவட்டங்களிலும் ஹால்மார்க்கிங் மையங்கள் தொடங்கும். இதற்குப் பிறகு, புதிய மற்றும் பழைய 288 மாவட்டங்களில் ஹால்மார்க்கிங் அவசியமாகும். மேலும் நகைக்கடைக்காரர் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே விற்க வேண்டும். ஹால்மார்க்கிங் தரநிலையின்படி, இந்த மாவட்டங்களில் ஜூன் 1 முதல் 14, 18, 20, 22, 23 மற்றும் 24 காரட் நகைகள் விற்பனை செய்யப்படும். அதாவது, இப்போது ஹால்மார்க் இல்லாமல் தங்கத்தை விற்க முடியாது.


ஆக்சிஸ் வங்கி: சராசரி மாத இருப்பு வரம்பின் உயர்வு


ஆக்சிஸ் வங்கி கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு சராசரி மாத இருப்பு வரம்பை ரூ.15,000லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தியுள்ளது. வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 1, 2022 முதல் சேமிப்பு / சம்பளக் கணக்கின் கட்டணக் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஆட்டோ டெபிட் அணுகல் இல்லாததற்கான அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க முடியாவிட்டால், கூடுதல் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.


பிரதமர் கரிப் கல்யாண் திட்டம்


பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டின் பல மாநிலங்களில் கிடைக்கும் இலவச கோதுமைக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. உ.பி., பீகார் மற்றும் கேரளாவில் ஜூன் 1ம் தேதி முதல் 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசிக்கு பதிலாக 5 கிலோ அரிசி மட்டுமே கிடைக்கும். கோதுமை கொள்முதல் குறைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களுக்கு முன்பு போல் கோதுமை தொடர்ந்து கிடைக்கும், இங்கு ரேஷன் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது.


மேலும் படிக்க | இபிஎஃப் கணக்கில் புதிய நாமினேஷனை தாக்கல் செய்வது எப்படி? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR