கார் வாங்கணுமா? இந்த வங்கி வட்டி விகிதங்களை குறைத்துள்ளது

Car Loan: ஒருபுறம், பல்வேறு வங்கிகள் கடனுக்கான வட்டியை அதிகரித்துக் கொண்டிருக்க, மறுபுறம் பாங்க் ஆப் பரோடா வட்டியைக் குறைத்து பெரும் நிவாரணம் அளித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 3, 2022, 04:42 PM IST
  • பாங்க் ஆஃப் பரோடா கார் கடன் வட்டி விகிதம்.
  • கார் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது வங்கி.
  • செயலாக்கக் கட்டணத்தில் பெரும் தள்ளுபடி.
கார் வாங்கணுமா? இந்த வங்கி வட்டி விகிதங்களை குறைத்துள்ளது title=

பாங்க் ஆஃப் பரோடா கார் கடன் வட்டி விகிதம்: நீங்களும் கார் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. கார் நிறுவனங்கள் கார்களின் விலையை அதிகரித்து வரும் நிலையில், பாங்க் ஆஃப் பரோடா கார் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. 

இதனால் கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு நேரடி நன்மை கிடைக்கும். கார் கடனுக்கான வட்டி விகிதத்தை பாங்க் ஆப் பரோடா 0.25 சதவீதம் குறைத்துள்ளது.

வட்டி விகிதம் 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது

பாங்க் ஆஃப் பரோடா வங்கி வட்டி விகிதத்தை வங்கி 7 சதவீதமாக குறைத்துள்ளது. ஒருபுறம், பல்வேறு வங்கிகள் கடனுக்கான வட்டியை அதிகரித்துக் கொண்டிருக்க, மறுபுறம் பாங்க் ஆப் பரோடா வட்டியைக் குறைத்து பெரும் நிவாரணம் அளித்துள்ளது. தற்போது, ​​வங்கி கார் கடனுக்கு 7.25 சதவீத வருடாந்திர வட்டி வசூலிக்கிறது. வட்டி குறைப்புடன், கடனுக்கான செயலாக்க கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளதாக வங்கி தரப்பில் கூறப்பட்டது.

செயலாக்கக் கட்டணத்தில் பெரும் தள்ளுபடி

இந்த சலுகையின் கீழ், வங்கியானது வாடிக்கையாளர்களிடமிருந்து 1,500 ரூபாய் + ஜிஎஸ்டியை செயலாக்கக் கட்டணமாக வசூலிக்கும். இந்தச் சலுகை ஜூன் 30, 2022 வரை செல்லுபடியாகும். புதிய கார் வாங்கினால் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். வட்டி விகிதம் வாடிக்கையாளரின் 'கிரெடிட் ப்ரொஃபைலுடன்’ இணைக்கப்பட்டிருக்கும்.

மேலும் படிக்க | இந்தியாவில் BMW i4 எலக்ட்ரிக் கார்: 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 164 கிமீ ஓடும் 

வங்கியின் பொது மேலாளர் எச்.டி.சோலங்கி கூறுகையில், "கார் கடனுக்கான வட்டி விகிதம் மற்றும் செயலாக்கக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான வாகனத்தை வாங்கும் வசதி இனி கிடைக்கும்" என்றார். 

இருப்பினும், செகண்ட் ஹேண்ட் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த மாதம், பாங்க் ஆப் பரோடா, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 6.75ல் இருந்து 6.50 சதவீதமாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு பலன் இருக்கும்

நீங்கள் கார் வாங்க, 7 ஆண்டுகளுக்கு ரூ.10 லட்சம் கார் கடனைப் பெற திட்டமிட்டால், 7.25 சதவீதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.15,215 இஎம்ஐ செலுத்த வேண்டும். அதே கடன் இப்போது ஆண்டுக்கு 7 சதவிகிதம் என்ற அளவில் கிடைத்தால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் 15,093 ரூபாய் இஎம்ஐ செலுத்த வேண்டும். அதாவது, ஒவ்வொரு மாதமும் ரூ.122 குறைவாக செலுத்தலாம். ஒரு வருடத்திற்கு ரூ.1464 குறைவாக இருக்கும். 

மேலும் படிக்க | Tata Motors: கார்களின் விலையை அதிகரித்தது நிறுவனம், விவரம் இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News