பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களுக்கான முக்கியமான செய்தி உள்ளது. அரசு ஊழியர்கள் இந்த தகவலை கண்டிப்பாக தெரிந்துவைத்திருக்க வேண்டும். ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது முதல் ஊழியர்கள் சங்கடத்தில் உள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என ஊழியர் சங்கங்கள் பல வித போராட்டங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் நிதி அமைச்சகம் ஊழியர்களின் ஓய்வூதிய முறையை மறுபரிசீலனை செய்ய ஒரு குழுவை அமைத்தது. நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் மேற்பார்வையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்குப் பொருந்தக்கூடிய என்பிஎஸ் -ஐ மாற்ற வேண்டுமா அல்லது பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் நன்மைகளை இதில் சேர்ப்பதற்கான மாற்றங்களை இதில் செய்ய வேண்டுமா என்பது குறித்து இந்த குழு ஆராய்ந்து தன் பரிந்துரைகளை அளிக்கும். 


குழு அமைக்கப்பட்டது


என்பிஎஸ் -இன் கீழ் உள்ள ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைகளை புதிதாக அமைக்கப்பட்ட குழு வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவின் தலைவராக திரு, சோமநாதன் இருப்பார். இவருடன் பயிற்சித் துறையின் (DOPT) செயலர், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) மற்றும் செலவினத் துறையின் சிறப்புச் செயலர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். கடந்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிச் செயலாளர் தலைமையிலான குழு ஊழியர்களுக்கான என்பிஎஸ்-ன் கீழ் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்களை ஆராயும் என்று கூறியிருந்தார். 


மேலும் படிக்க | OPS vs NPS: அரசு எடுத்த பெரிய முடிவு, இரண்டு ஓய்வூதிய முறைகளில் எது சிறந்தது?


பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த மாநிலங்கள் முடிவு செய்துள்ளன


நாட்டில் பாஜக அரசு அல்லாத பல மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு பல மாநிலங்களில் பழைய பென்ஷன் ஓபிஎஸ் அமல்படுத்தப்பட்ட நிலையில், வேறு சில மாநிலங்களிலும் ஓபிஎஸ் கோரிக்கை வைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு இது குறித்து அரசு முடிவெடுக்கும். ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஓபிஎஸ் செயல்படுத்தியுள்ளது. இந்த மாநிலங்கள் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்திய பிறகு, மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


என்பிஎஸ்ஸில் டெபாசிட் செய்யப்பட்ட நிதியைத் திருப்பித் தருமாறு இந்த மாநிலங்களால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2004 க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை ஓபிஎஸ்-ஐ மீட்டெடுப்பதற்கான எந்தவொரு திட்டத்தையும் பரிசீலிக்கவில்லை என்று நிதித்துறை கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.


என்பிஎஸ் திட்டத்தின் நன்மைகள்


என்பிஎஸ் -இன் கீழ், வருமான வரித் துறையின் பிரிவு 80C மற்றும் 80CCD இன் கீழ் வரி விலக்கு கோரலாம்.


என்பிஎஸ் திட்டம் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஓய்வூதிய நிதிகள் மற்றும் முதலீட்டு விருப்பங்களை தேர்வு செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.


OPS vs NPS: இரண்டில் எது அதிக நன்மை பயக்கும்


ஓபிஎஸ் மற்றும் என்பிஎஸ் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், பழைய ஓய்வூதியத் திட்டம் பாதுகாப்பான திட்டமாகும். இது அரசு கருவூலத்தில் இருந்து செலுத்தப்படும். புதிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. இதில் நீங்கள் என்பிஎஸ்ஸில் முதலீடு செய்யும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் பெறப்பட்ட தொகை உங்களுக்கு வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | Old Pension ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்: நிதியமைச்சர் அறிவித்த பெரிய முடிவு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ