Old Pension ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்: நிதியமைச்சர் அறிவித்த பெரிய முடிவு

Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கான என்பிஎஸ் இன் கீழ் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனைகளை நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆராயும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 7, 2023, 08:18 AM IST
  • நிதிச் செயலாளர் தலைமையில் புதிய குழு அமைத்தல்.
  • பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த சமீபத்திய புதுப்பிப்பு.
  • ஊழியர்களின் ஓய்வூதிய முறையை மறுஆய்வு செய்ய நிதி அமைச்சகம்.
Old Pension ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்: நிதியமைச்சர் அறிவித்த பெரிய முடிவு title=

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த சமீபத்திய புதுப்பிப்பு: அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. ஊழியர்களின் ஓய்வூதிய முறையை மறுஆய்வு செய்ய நிதி அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்குப் பொருந்தக்கூடிய தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் தற்போதைய கட்டமைப்பில் ஏதேனும் மாற்றம் தேவையா இல்லையா என்பதை இந்தக் குழு பரிந்துரைக்கும்.

நிதிச் செயலாளர் தலைமையில் குழுவை அமைத்தல்
இந்த நிலையில் NPS இன் கீழ் உள்ள ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்களை மேம்படுத்தும் நோக்கில் அதைத் திருத்துவது குறித்த ஆலோசனைகளை இந்தக் குழு வழங்கும். சோமநாதன் தலைமையிலான குழுவில், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செயலர், செலவினத் துறை சிறப்புச் செயலர் மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். மேலும் அரசு ஊழியர்களுக்கான என்பிஎஸ்-ன் கீழ் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனைகளை நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆராயும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | பெரும்பாலான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது அரசு!

மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திய பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது
இதனிடையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பை, பாஜக அல்லாத மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும், வேறு சில மாநிலங்களில் உள்ள ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறுவதற்கான முடிவை மத்திய அரசிடம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த மாநிலங்கள் என்பிஎஸ்-ன் கீழ் வசூலிக்கப்பட்ட நிதியை திரும்ப அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. 

முன்னதாக ஜனவரி 1, 2004 க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை OPS ஐ மீட்டெடுக்கும் எந்த திட்டத்தையும் பரிசீலிக்கவில்லை என்று நிதி அமைச்சகம் கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | வீட்டுக்கடன் வாங்க போறீங்களா? இந்த ஆவணங்கள் முக்கியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News