இனி ரயிலில் நண்பர்களுக்கு டிக்கெட் போட முடியாதா? ரயில்வே கொடுத்த அப்டேட்!
Indian Railways: இனிமேல் ஒருவர் தனது தனிப்பட்ட ஐஆர்சிடிசி கணக்கு மூலம் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் சிறை தண்டனை என தகவல் வெளியானது. அதுகுறித்து இந்திய ரயில்வே தற்போது விளக்கம் அளித்துள்ளது.
Indian Railways News Updates: ஒருவர் ரயிலில் பயணம் செல்வதற்கு முன்பதவி செய்ய வேண்டியது அவசியம். முன்பதிவு செய்யாமல் பொதுப்பெட்டியிலும் ஒருவர் பயணிக்கலாம் என்றாலும் இருக்கைக்கு எவ்வித உத்தரவாதமும் இருக்காது. பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் பொதுப்பெட்டியில் நின்று செல்லக்கூட வழி இருக்காது. எனவே, நீங்கள் நீண்ட தூரம் பயணிப்பவராகவோ அல்லது இரவில் பயணிப்பவராகவோ இருக்கும்பட்சத்தில் நிச்சயம் டிக்கெட்டை முன்பதிவு செய்வீர்கள்.
இதில் ஒருவர் தனக்கு மட்டுமின்றி தங்களின் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என பலருக்கும் ஐஆர்சிடிசி மூலம் ரயிலில் முன்பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த வழக்கம் பல பேருக்கு இருக்கிறது. அந்த வகையில், கடந்த சில நாள்களுக்கு முன் ரயில்வேயின் புதிய விதி என்ற பெயரில் பரவிய சில தகவல்களால் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
தீயாக பரவிய தகவல்
அதாவது, இனிமேல் ஒருவர் தனது தனிப்பட்ட ஐஆர்சிடிசி (IRCTC) கணக்கின் மூலம் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால், இனி அவர்களின் ரத்த உறவுகள் அல்லது ஒரே குடும்பப் பெயரை கொண்டவர்களுக்கு மட்டுமே போட முடியும். இதனை மீறினால் இந்திய ரயில்வே சட்டத்தின் 143ஆவது பிரிவின்படி 3 வருடங்களுக்கு சிறை தண்டனை என்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால் இது முற்றிலும் போலியான தகவல் என தற்போது உறுதியாகி உள்ளது.
மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு முக்கிய அப்டேட்! 4 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணத்தில் தள்ளுபடி!
உண்மையில், 143ஆவது பிரிவின்படி, அங்கீகரிக்கப்படாத டிக்கெட் வணிகத்தில் ஈடுபடுவோருக்கே இந்த தண்டனைகள் விதிக்கப்படும். டிக்கெட் முன்பதிவைக் கட்டுப்படுத்தும் எந்த ஒரு உத்தரவையும் இந்திய ரயில்வே வெளியிடவில்லை. இந்நிலையில், சமீபத்தில் வெளியான இந்த வதந்திக்கு இந்திய ரயில்வே தற்போது விளக்கம் அளித்துள்ளது.
ஐஆர்சிடிசி கொடுத்த விளக்கம்
ஐஆர்சிடிசி அதன் X பக்கத்தில், "வெவ்வேறு குடும்பப்பெயர்களால் இ-டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் கட்டுப்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி தவறானது மற்றும் போலியானது" என உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் அது வெளியிட்ட விளக்கத்தில்,"குடும்பப்பெயர் தொடர்பான கட்டுப்பாடுகள் என ஏதுமில்லை. நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆகியோருக்கு தனிப்பட்ட ஐஆர்சிடிசி கணக்குகளின் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்" என தெரிவித்துள்ளது.
மேலும், ரயில்வே பயனர்கள் ஒரு மாதத்திற்கு 12 நபர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆதார்-அங்கீகரிக்கப்பட்ட பயனர்களால் முன்பதிவு செய்யப்படும்பட்சத்தில், டிக்கெட்டில் குறைந்தபட்சம் ஒரு பயணியாவது ஆதார்-அங்கீகரித்துடன் பயணிக்கும்பட்சத்தில் இந்த வரம்பு 24 டிக்கெட்டுகள் வரை நீட்டிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
இருப்பினும், ரயில்வே துறை அதன் பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது. அதில் இந்திய ரயில்வே சட்டம், 1989இன் பிரிவு 143இன் கீழ் தனிப்பட்ட ஐஆர்சிடிசி கணக்குகளை வணிக நோக்கில பயன்படுத்துவது என்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும். அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே வணிக பயன்பாட்டிற்காக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என ஐஆர்சிடிசி தனது விளக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க | சென்னை டூ பூடான்... IRCTC வழங்கும் பட்ஜெட் பேக்கேஜ் விபரம்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ