7th Pay Commission: ஊழியர்களுக்கு அரசின் பரிசு... விரைவில் பல கொடுப்பனவுகளில் ஏற்றம்
7th Pay Commission:தேர்தலுக்கு முன், மத்திய அரசு அகவிலைப்படி, அகவிலைப்படி நிவாரணம் மற்றும் பிற கொடுப்பனவுகளில் மிகப் பெறிய ஏற்றத்தை செய்யும் என கூறப்படுகிறது.
7வது சம்பள கமிஷன்: நாட்டின் மத்திய துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பெரும் செய்தி வெளியாகி உள்ளது. மத்திய அரசு, ஊழியர்களின் ஊதியத்தை மிக விரைவில் உயர்த்தப் போகிறது என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வரும் மக்களவை தேர்தலுக்கு முன், மத்திய அரசு அகவிலைப்படி, அகவிலைப்படி நிவாரணம் மற்றும் பிற கொடுப்பனவுகளில் மிகப் பெறிய ஏற்றத்தை செய்யும் என கூறப்படுகிறது. மத்திய அரசு இதைச் செய்தால், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்து, 46 சதவீதமாக உயரும். இது தவிர, ஓய்வூதியம் மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவு, அதாவது ஹெச்ஆர்ஏ -வையும் மத்திய அரசு உயர்த்தப் போவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
மத்திய ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்?
மத்திய அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தினால், 18 ஆயிரம் ரூபாய் பெறும் ஊழியரின் ஆண்டு உயர்வு 8,640 ரூபாயாக இருக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மறுபுறம், 56 ஆயிரம் அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு 4 சதவீதம் என்ற அடிப்படையில் உயர்வு 27,312 ரூபாயாக இருக்கும். இதுதவிர, தற்போது ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தையும் அரசு உயர்த்தப் போவதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்தால், நாட்டின் கோடிக்கணக்கான ஓய்வூதியதாரர்களும், ஊழியர்களும் நேரடிப் பயன் பெறுவார்கள்.
வீட்டு வாடகை கொடுப்பனவின் (HRA) கணக்கீட்டையும் புரிந்து கொள்ளுங்கள்
மத்திய அரசு அகவிலைப்படியுடன் வீட்டு வாடகை கொடுப்பனவு, அதாவது எஹ்ஆர்ஏ -வையும் அதிகரிக்கக்கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு எஹ்ஆர்ஏ -ஐ 3 சதவீதம் வரை அதிகரிக்கலாம். 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அரசாங்கம் வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில், இப்போது எஹ்ஆர்ஏ -வில் மீண்டும் ஒரு அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு 3 வகையான ஹவுஸ் ரென்ட் அலவன்ஸ் -ஐ தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது X வகை 3%, Y பிரிவு 2% மற்றும் Z பிரிவு 1%. உண்மையில் X வகை நகரத்தின் கீழ் வருகிறது, எனவே அரசாங்கம் இந்த வகை நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கு 3% எஹ்ஆர்ஏ -ஐ வழங்குகிறது. தற்போது, இசட் வகுப்பு ஊழியர்கள் 9, Y 18 மற்றும் X 27% எச்ஆர்ஏ -ஐ அவர்களின் அடிப்படை சம்பளத்தில் பெறுகின்றனர்.
அகவிலைப்படி அதிகரிப்பு
ஏழாவது ஊதியக் குழுவின் படி, அரசாங்கம் ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியை அதிகரிக்கிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முதல் அதிகரித்த விகிதங்கள் அமலுக்கு வருகின்றன. அரசாங்கம் இப்போது அகவிலைப்படியை உயர்த்தினால், அதன் விகிதங்கள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும். எனினும் இதற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வு தொழிலாளர் துறையால் வெளியிடும் ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்களைப் பொறுத்தது. இதுவரை மே 2023 வரையிலான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் அகவிலைப்படி விகிதம் 45.57 புள்ளிகளை எட்டியுள்ளது. இப்போது ஜூன் மாத புள்ளிவிவரங்கள் மட்டுமே இன்னும் வரவில்லை. இது ஜூலை 31 அன்று வெளியிடப்படும். ஜூலை முதல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்பது அதன் பிறகு தெளிவாகும். ஜூலை மாதத்தில் 4 சதவீத டிஏ உயர்வு இருக்கும் என்றும், அதன் பிறகு ஊழியர்களின் டிஏ 46 சதவீதமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜூலை 1, 2023 முதல் செயல்படுத்தப்படும்
மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி.. விரைவில் 3 குட் நியூஸ்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ