சேமிப்பு திட்டம்: நாட்டு மக்களுக்காக மோடி அரசு பல வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதே நேரத்தில், சமீபத்தில் மோடி அரசு பெண்களுக்கான ஒரு அசத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் பெண்கள் மட்டுமே பயன்பெற முடியும். இந்த திட்டம் தொடர்பாக மோடி அரசு தற்போது மற்றொரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இப்போது பெண்களுக்கு வரிச் சலுகை கிடைக்கப் போகிறது. இது இந்த திட்டத்தில் இதுவரை சேர்ந்துள்ளவர்களுக்கும், இனி சேர திட்டமிட்டுள்ளவர்களுக்கும் பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெண்களுக்கான திட்டம்


மகிளா சம்மான் சேமிப்பு பத்திர திட்டத்தில் இருந்து கிடைக்கும் வட்டியில் இனி TDS பிடித்தம் செய்யப்படாது என அரசு அறிவித்துள்ளது. CBDT அறிவிப்பின்படி தகுதியான வரி அடுக்குகளின்படி, தொகை பெறுபவருக்கு கிடைக்கும் வட்டி வருமானத்தில் வரி விதிக்கப்படும். CBDT சேமிப்பு திட்டத்திற்கான டிடிஎஸ் விதியை மே 16 அன்று அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், சிறுமிகள் அல்லது பெண்களின் பெயரில் கணக்கு தொடங்கலாம்.


அறிவிப்பு


மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் (MSSC) திட்டத்தில் பெற்ற வட்டிக்கு TDS பொருந்தாது என்று CBDT அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. இதன் வட்டி ஒரு நிதியாண்டில் 40,000 ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் வரி விதிக்கப்படாது. இந்தத் திட்டம் 7.5% என்ற விகிதத்தில் ஒரு வருடத்தில் ரூ. 15,000 மற்றும் இரண்டு ஆண்டுகளில் ரூ. 32,000 என்ற அளவிலான ரிடர்னை அளிக்கின்றது. ஒரு நிதியாண்டில் கிடைக்கும் வட்டி ரூ.40,000-க்கும் குறைவாக இருக்கும் என்பதால், இதற்கு டிடிஎஸ் பொருந்தாது என்று கூறலாம்.


மேலும் படிக்க | Post Office RD Scheme: ரூ.100 போட்டால் போதும், அட்டகாசமான லாபம் காணலாம்


மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் 


மகிளா சம்மான் சேமிப்பு பத்திர திட்டத்தை இரண்டு வருட காலத்திற்குத் தொடங்கலாம். இதில் பகுதி அளவு தொகையை எடுக்கும் வசதியும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் காலாண்டுக்கு ஒரு நிலையான வட்டி வழங்கப்படுகின்றது. இந்தத் திட்டம் மார்ச் 31, 2025 வரை இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்தத் திட்டத்தில் 7.5% வட்டி கிடைக்கும். மேலும், அதிகபட்ச முதலீட்டு வரம்பு இதில் 2 லட்சம் ரூபாய் ஆகும்.


மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் ஏப்ரல் 1 முதல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை பட்ஜெட்டின் போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். குறிப்பாக பெண்களுக்காக சிறந்த வட்டி விகிதத்தில் தொடங்கப்பட்ட வைப்புத் திட்டமாகும் இது. ஏப்ரல் 26 அன்று, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தத் திட்டத்தின் கீழ் தனது கணக்கைத் திறக்க நாடாளுமன்றத் தெருவில் உள்ள தபால் நிலையத்தில் வரிசையில் நின்றதிலிருந்து இந்த திட்டத்துக்கு அதிக கவனம் கிடைத்து, இது குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.


இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன?


மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்பது பெண்களை சேமிக்க ஊக்குவிக்கும் திட்டமாகும். இத்திட்டத்தில் பெண்களுக்கு 7.5 சதவீத வட்டி கிடைக்கும். இத்திட்டம் கூட்டு வட்டியின் பலனை வழங்குகிறது மற்றும் வட்டியானது காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் அதிக லாபம் கிடைக்கிறது.


இந்த கணக்கை எப்போது திறக்க முடியும்?


இந்த தபால் அலுவலக திட்டம் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். 31 மார்ச் 2025 வரை இதில் முதலீடு செய்யலாம். எந்தப் பெண்ணும் இதில் ரூ.1000 முதல் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.


மேலும் படிக்க | 7th pay commission: அடி தூள்... 50% டிஏ, அடிப்படை ஊதியத்தில் எக்கச்சக்க ஏற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ