EPFO Pension Update: இபிஎஃப்ஓ பயனாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. அதிக ஓய்வூதியத்தை விரும்புவோருக்கு அரசாங்கத்திடம் இருந்து புதிய அப்டேட் வந்துள்ளது. அதிக ஓய்வூதியம் என்ற விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால் அல்லது அவ்வாறு செய்ய திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிக ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுத்த இபிஎஃப்ஓ -இன் ஓய்வூதியத் திட்டத்தின் பங்குதாரர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள், கூடுதல் பங்களிப்பு அல்லது நிலுவைத் தொகையைச் செலுத்த ஒப்புக்கொள்ள 3 மாத கால அவகாசம் வழங்கப்படும். முன்னதாக, நவம்பர் 2022 இல், உயர் ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்வுசெய்ய பங்குதாரர்களுக்கு நான்கு மாதங்கள் அவகாசம் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் அரசாங்கத்திடம் கேட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படிவத்தை நிரப்ப ஆன்லைன் வசதி உள்ளது


இபிஎஃப்ஓ அமைப்பு தனது சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு தங்கள் முதலாளி  / நிறுவனத்துடன் இணைந்து கூட்டு விருப்ப படிவத்தை நிரப்ப ஆன்லைன் வசதியை வழங்கியுள்ளது. இதற்கான காலக்கெடு முன்னர் மே 3, 2023 ஆக இருந்தது. அது இப்போது ஜூன் 26, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், கூடுதல் அதிக ஓய்வூதியத்திற்கான விருப்பத்தை தேர்ந்தெடுத்த பின்னர், கூடுதல் பங்களிப்பின் விருப்பம் எவ்வாறு செயல்படும், பணம் செலுத்தும் முறை எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய தெளிவு இன்னும் இல்லை. 


கூடுதல் தொகையை மண்டல அலுவலர்கள் தீர்மானிப்பார்கள்


ஒருவேளை கூடுதலாக கேட்கப்படும் தொகை அதிகமாக இருந்தால், அதிக ஓய்வூதிய திட்டத்தில் இருந்து விலகுவதற்கான விருப்பம் கிடைக்குமா என்பது பற்றியும் தற்போதது இபிஎஃப்ஓ பங்குதாரருக்கு எந்த தெளிவும் இல்லை. கூடுதல் தொகையை மண்டல அலுவலர்கள் முடிவு செய்வார்கள் என அறிவிப்பில் தெளிவுபடுத்தப்பட்டது. எவ்வளவு தொகை நிர்ணயிக்கப்பட்டாலும், அதிக ஓய்வூதியத்தை விரும்பும் பங்குதாரர்களுக்கு வட்டியுடன் அதைப் பற்றிய தகவல் வழங்கப்படும்.


மேலும் படிக்க | EPF account: வேலை மாறும்போது PF கணக்கை மாற்றாவிட்டால் என்ன நடக்கும்?


சம்மதம் தெரிவிக்க மூன்று மாதங்கள் அவகாசம் 


ஓய்வூதியம் பெறுவோர் / உறுப்பினர்கள் பணத்தை டெபாசிட் செய்யவும், நிதி பரிமாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கவும் மூன்று மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. EPFO இன் பிராந்திய அதிகாரி, ஓய்வூதியம் பெறுவோர் அல்லது உறுப்பினர்களுக்கு அதிக ஓய்வூதியத்திற்கான கூடுதல் நிதியை செலுத்த வேண்டியதன் அவசியத்தை தெரிவிப்பார்.


இந்த மாத தொடக்கத்தில், அதிக ஓய்வூதியத்தை விரும்புவோரின் அடிப்படைச் சம்பளத்தில் 1.16 சதவிகிதம் கூடுதல் பங்களிப்பு EPFO-ன் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பிலிருந்து எடுக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் தெளிவுபடுத்தியது. தற்போது, ​​அரசாங்கம் இபிஎஸ் -இல் ரூ.15,000 என்ற அடிப்படை சம்பள வரம்பில் 1.16 சதவீதத்தை மானியமாக வழங்குகிறது.


இபிஎஃப்ஓவின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பணியாளர்கள் 12 சதவீதம் பங்களிக்கின்றனர். முதலாளி / நிறுவனத்தின் 12 சதவீத பங்களிப்பில், 8.33 சதவீதம் இபிஎஸ்-க்கு செல்கிறது. மீதமுள்ள 3.67 சதவீதம் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு செல்கிறது.


அதிக ஓய்வூதியம்: 1.16% பங்களிப்பு கணிதம்
- நிர்வாகம் / முதலாளி தரப்பிலிருந்து 1.16% கூடுதல் பங்களிப்பு
- தற்போதுள்ள விதிகளின்படி, அரசு 1.16% பங்களிக்கிறது.
- 15,000 ரூபாய் வரையிலான வருமானத்தில் இருந்து ஓய்வூதியத்தில் அரசு மானியம்
- நீங்கள் அதிக ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்வு செய்தால், முதலாளி 1.16% பங்களிப்பார்.


அதிக ஓய்வூதியம் பற்றிய குழப்பம்


- ஓய்வூதிய நிதிக்கு முந்தைய ஆண்டுகளின் பங்களிப்பு எவ்வாறு வேலை செய்யும்?
- பிஎஃப் கணக்கிலிருந்து கழித்தால், பின் ஓய்வூதிய கார்பஸ் குறைவாக இருக்குமா?
- ஓய்வூதிய நிதியில் பிஎஃப் தொகை எத்தனை சதவீதத்தில் நிரப்பப்படும்?


EPS மூலம் அதிக பென்ஷன்: இதற்கு யார் தகுதியானவர்?


- 1 செப்டம்பர் 2014க்கு முன் EPS உறுப்பினர்களானவர்கள்  பயன்பெறலாம்
- 2014 முதல் EPFக்கு தொடர்ந்து பங்களித்து வந்திருந்தால் பலன் கிடைக்கும்.
- 2014ல் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பித்தவர்களும் தகுதியானவர்கள்


மேலும் படிக்க | EPFO: மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.15,670 பெறலாம்! இத மட்டும் பண்ணுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ