பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் பலனை அனுபவிக்க வேண்டுமானால் அரசு ஊழியராக தான் இருக்க வேண்டும் என்பது கிடையாது. ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரிந்தால், பெரும்பான்மையான தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுக்குப் பின்னர் பலன்களை அனுபவிக்க தகுதியுடையவர்களாக கருதப்படுகிறார்கள். கமர்ஷியல் செக்டரில் உள்ள அரசாங்கப் பணியாளர்களும் ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள். இபிஎஃப் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவப்பட்டது. இந்த சட்டத்தின்படி, யூஏஎன் அல்லது தனிப்பட்ட கணக்கு எண் மூலம் அடையாளம் காணப்பட்ட நிரந்தரக் கணக்கில் ஊழியர் மற்றும் முதலாளி இருவரும் போடும் பணத்திற்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) பொறுப்பாகும். கணக்கிலுள்ள பணத்தை கணக்கிட இபிஎஃப் கால்குலேட்டர் உதவியாக இருக்கிறது, இதனை பயன்படுத்தி உங்கள் சேமிப்பை கணக்கிடலாம்.
மேலும் படிக்க | EPFO:58 வயதுக்கு முன்னரே பென்ஷன் வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
எதிர்கால நிதி நிலை அல்லது வேலை இழப்பு போன்றவற்றிற்கு உத்தரவாதம் தருவதால், வருங்கால நிதி முடிவுகளை எடுப்பதற்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இபிஎஃப் அமைப்பின் கீழ் உள்ள பணியாளர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து 12% ஒரு நிலையான தொகையை இந்த திட்டத்தில் பங்களிக்கின்றனர். ஊழியர்களின் பங்களிப்பு மட்டுமின்றி, அவர்களது முதலாளியும் ஊழியர்களுக்கு சமமாக இந்த திட்டத்தில் 12% பங்களிப்பைச் செய்கின்றனர். இவர்களின் பங்களிப்பில் 8.33% தொகை இபிஎஸ் திட்டத்திற்கும், 3.67% தொகை ஊழியரின் இபிஎஃப் கணக்கிற்கும் செல்கிறது. ஊழியர் எப்படி பங்களிக்கிறாரோ அதேபோன்று முதலாளியும் இபிஎஃப் திட்டத்தில் சமமான பங்களிப்புகளை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அறங்காவலர் குழு, நிதி அமைச்சகத்துடன் ஆலோசனை செய்த பிறகு இபிஎஃப் வட்டி விகிதங்களை தீர்மானிக்கிறது. 2022–2023 நிதியாண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதம் 8.15% என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக ஒரு ஊழியரின் சம்பளம் அகவிலைப்படி உட்பட ரூ.1,00,000 என்று வைத்துக்கொள்வோம். அதில் ஊழியர்களின் இபிஎஃப்-க்கான பங்களிப்பு 12% அதாவது ரூ.12,000. இப்போது முதலாளி பங்கிற்கு 3.67% பங்களிப்பை வழங்குகிறார், அதாவது ரூ.3,670. மேலும் முதலாளி இபிஎஸ்-க்கு பங்களிக்கிறார், இது 40,000 இல் 8.33%, அதாவது ரூ.8,330 ஆகும். இப்போது பணியாளரின் இபிஎஃப் கணக்கில் முதலாளி மற்றும் பணியாளரின் மொத்த பங்களிப்பு ரூ.15,670 ஆக இருக்கும். ஒவ்வொரு மாதத்திற்கும் பொருந்தும் வட்டி விகிதம் 8.15%/12 = 0.679% ஆக இருக்கும், மொத்தமாக கணக்கிட்டால் கணக்கில் மொத்த பங்களிப்பு ரூ.15,670 ஆக இருக்கும்.
மேலும் நாட்டின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா திட்டத்தை மோடி அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த அரசு திட்டமானது ஓய்வூதிய காலத்தை பாதுகாப்புக்காக வைத்துக்கொள்ள நடத்தப்படுகிறது. அமைப்புசாரா தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், தெருவோர வியாபாரிகள், மதிய உணவுத் தொழிலாளர்கள், தலை சுமை தூக்குபவர்கள், செங்கல் சூளைத் தொழிலாளர்கள், செருப்புத் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், ரிக்ஷாக்காரர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், விவசாயம், கைத்தறி தொழிலாளர்கள் மற்றும் தோல் தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த வகையின் கீழ் வருகிறார்கள். தகவல்படி, நாட்டில் சுமார் 42 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர்.
மேலும் படிக்க | EPFO மிகப்பெரிய அப்டேட்: அதிகரிக்கிறது குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ