Ration Card Latest Update: உங்களிடம் இருக்கும் ரேஷன் கார்டு மூலம், அரசின் இலவச ரேஷன் திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கானதுதான். 269 மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம் (PDS) மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி (ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்ட) விநியோகிக்கப்படுகிறது. அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டின் மற்ற மாவட்டங்களும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்படும். இந்தத் தகவலை மத்திய உணவுத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2024ஆம் ஆண்டுக்குள், அரசுத் திட்டங்கள் மூலம் நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி, 2021ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்குப் பிறகு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை பிரச்னையை போக்கவும், நுண்ணூட்டச்சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம், 2021ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது.


மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி, அரசு வெளியிட்ட புதிய தகவல்


மத்திய அரசின் தனித்துவமான மற்றும் வெற்றிகரமான முயற்சியான இது, கடந்த இரண்டு ஆண்டுகளாக அரிசி விநியோகம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்று சோப்ரா கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், 'மத்திய அரசின் தனித்துவமான மற்றும் மிகவும் வெற்றிகரமான முயற்சியான இது, கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்ல பலனைத் தந்துள்ளது. மக்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். முன்னதாக சில தவறான புரிதல்கள் இருந்தது. ஆனால் அவை விரைவில் நீக்கப்பட்டது. இந்த முயற்சி ஆரோக்கியமான இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைக்கும்' என்றார்.


தொடர்ந்து அவர் பேசுகையில், 'இதுவரை 269 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் கலப்பட அரிசி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நாம் எந்த வேகத்தில் முன்னேறி வருகிறோம், மீதமுள்ள மாவட்டங்கள் காலக்கெடுவிற்கு முன் திட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும்' என தெரிவித்தார். 


நாட்டில் சுமார் 735 மாவட்டங்கள் உள்ளதாகவும், அதில் 80 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் அரிசியை உண்பதாகவும் அவர் கூறினார். சோப்ரா மேலும் கூறுகையில், தற்போது இந்த அரிசியின் உற்பத்தி திறன் சுமார் 17 லட்சம் டன்களாக உள்ளதால், நாட்டில் போதுமான செறிவூட்டப்பட்ட அரிசி உள்ளது என்றார். 


மேலும் படிக்க | ஜாக்பாட்! இனி அரிசி இலவசம்..அதுவும் இவ்வளவு கிலோவா? அசத்தும் அரசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ