ரேசன் கார்டு குறித்த முக்கிய விவரம்: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. வரும் விஜயதசமி பூஜைக்கு முன்னதாக, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் சிறப்பு மானிய பரிசு வழங்கப்படும். இந்த முடிவை மாநில அரசு எடுத்துள்ளது. இந்த முடிவு செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு திட்டத்தை முதல்வர் மாணிக் ஷாஹா தொடங்கி வைக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிஃப்ட் ஹேம்பரின் பலனைப் பெறுவீர்கள்:
இந்நிலையில் இதுகுறித்து திரிபுரா உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் சுஷாந்த் சவுத்ரி கூறியதாவது.,1 லிட்டர் கடுகு எண்ணெய் தவிர, 1 கிலோ பருப்பு, 2 கிலோ கோதுமை மாவு, 1 கிலோ சர்க்கரை, 500 கிராம் ரவை ஆகியவை கிஃப்ட் ஹேம்பரில் வழங்கப்படும். இருப்பினும் முன்னதாக ரேஷன் கடைகளில் கடுகு எண்ணெய் லிட்டருக்கு 128 ரூபாய்க்கு விற்கப்படும் என முடிவு செய்யப்பட்டது, ஆனால் பின்னர் ரூ.15 கூடுதல் மானியமாகத் துறை வழங்கியுள்ளது.


மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய ஊழியர்களின் வந்தாச்சி குட் நியூஸ், டிஏ குறித்த பெரிய அப்டேட் இதோ


ரேஷன் கார்டுதாரர்களுக்கு நான்கு மடங்கு மானியத்தில் கடுகு எண்ணெய் வழங்கப்படும். குறிப்பாக, சட்டசபை தேர்தலுக்கு முன், கடுகு எண்ணெய் வழங்கப்படும் என, பா.ஜ., அரசு வாக்குறுதி அளித்தது. அனைத்து ரேஷன் கடைகளும் புத்துயிர் பெற்று மாதிரி ரேஷன் கடைகளாக மாற்றப்படும் என அமைச்சர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக எட்டு மாவட்டங்களில் மொத்தமுள்ள 2056 கடைகளில் 600 கடைகளை மாதிரி ரேஷன் கடைகளாக மாற்ற திட்டம் தயாரிக்கப்பட்டது.


ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு:
அதேபோல் மகாராஷ்டிர மாநில அரசு ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தந்துள்ளது. அதன்படி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மகாராஷ்டிர மாநில அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் கீழ், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கிட் வழங்கப்படும். தீபாவளியை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.


வெறும் 100 ரூபாயில் 6 பொருட்கள்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநில அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் தொகுப்பில் நான்கு பொருட்களுக்குப் பதிலாக தற்போது ஆறு பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதுவும் வெறும் 100 ரூபாய் செலுத்தி இந்த உதவியைப் ரேஷன் வைத்திருப்பவர்கள் பெறலாம்.


பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் கிடைக்கும்?
இந்நிலையில் இந்த புதிய பரிசுத் தொகுப்பில் 1 கிலோ சர்க்கரை, 1 லிட்டர் சமையல் எண்ணெய், அரை கிலோ ரவா-சனா பருப்பு, மாவு மற்றும் அவல் வழங்கப்படும். கூடுதல் பொருட்கள் வழங்கும் இந்த திட்டத்திற்கு மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது ரேஷன் கிட்டில் கோதுமை மாவு மற்றும் அவல் ஆகிய இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


எந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த கிஃப்ட் ஹேம்பர் தரப்படும்? 
மாநிலத்தின் அந்த்யோதயா மற்றும் பிற முன்னுரிமைத் திட்ட ரேஷன் கார்டுதாரர்கள் இதன் பலனைப் பெறுவார்கள். இது தவிர, விவசாயிகள் தற்கொலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வறுமைக் கோட்டிற்கு மேல் வாழும் கேசரி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரேஷன் கிட் வசதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | டபுள் ஜாக்பாட்.. உயர்கிறது அகவிலைப்படி, ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் அதிகரிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ