Ration card Scheme: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி
New Pension Rules: மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது . இப்போது இலவச ரேஷன் எடுப்பவர்களுக்கு UIDAI- ல் இருந்து பெரிய தகவல் கிடைத்துள்ளது . அரசின் இந்த முடிவால் நாட்டு மக்கள் பலன் அடைவார்கள்.
ஆதார் மூலம் ரேஷன் பெறலாம்
நாடு முழுவதும் ஆதார் வழங்கும் அமைப்பு வழங்கிய தகவலின் படி, இனி நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ஆதார் மூலம் ரேஷன் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியத் திட்டம்?
எனவே இனி ஆதார் அடிப்படையில் மட்டுமே நாடு முழுவதும் ரேஷன் வசதி கிடைக்கும் என்று UIDAI ட்வீட் செய்து தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும், உங்கள் ஆதார் அட்டை புதுப்பிக்கப்பட்டால் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும். இது தவிர, ரேஷன் கார்டு தொடர்பாக ஏதேனும் பிரச்னை இருந்தால், 1947 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை ஆன்லைனில் இப்படி இணைக்கவும்
1. இதற்கு முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2. இப்போது நீங்கள் 'Start Now' என்பதைக் கிளிக் செய்க.
3. இப்போது இங்கே உங்கள் முகவரியை மாவட்ட மாநிலத்துடன் நிரப்ப வேண்டும்.
4. இதற்குப் பிறகு 'Ration Card Benefit' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
5. இப்போது இங்கே உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்பவும்.
6. அதை பூர்த்தி செய்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
7. இங்கே OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள்.
8. இந்த செயல்முறை அனைத்தும் முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு, உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும்.
ஆஃப்லைனிலும் இணைக்கலாம்
ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க, ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை ரேஷன் சென்டரில் சமர்ப்பிக்கவும், இது தவிர, உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பும் ரேஷன் சென்டரில் செய்யலாம்.
மேலும் படிக்க | லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு லாட்டரி, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ