புதுடெல்லி: Aadhaar Appointment: ஆதார் அட்டை இந்தியாவில் அத்தியாவசிய ஆவணமாக மாறியுள்ளது. இது தவிர, ஆதார் அட்டை என்பது அடையாளச் சான்று மட்டுமல்ல, பல அரசு மற்றும் அரசு சாரா சலுகைகளுக்கு கட்டாய ஆவணமாகவும் உள்ளது. ஆதார் அட்டை ஒரு தனித்துவமான ஆவணமாகும், ஏனெனில் அதில் தேவையான அனைத்து தகவல்களும் உள்ளன. குழந்தை சேர்க்கையில் இருந்து அரசு படிவங்களை நிரப்பும் வரை ஆதார் அட்டை (Aadhaar Card) பயன்படுத்தப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதார் அட்டையை எளிதாக புதுப்பிக்கவும்!
ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதியை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ அல்லது புதிய ஆதார் அட்டையைப் (Aadhaar Card) பெற வேண்டியிருந்தாலோ, வீட்டிலேயே இருந்த படி அப்பாய்ண்ட்மென்ட் வாங்கலாம். ஆதார் அப்டேட்டுக்கு நீங்கள் எப்படி அப்பாயிண்ட்மெண்ட் (UIDAI) வாங்கலாம் என்பதை விரிவாக பார்போம்.


ALSO READ | ஆதார் கார்ட் இருக்கா? அப்போ சுலபமா தனிநபர் கடன் பெற முடியும்: முழு விவரம் இதோ


- புதிய ஆதார் பதிவு
- பெயர் அப்டேட் 
- முகவரி அப்டேட் 
- மொபைல் எண் அப்டேட் 
- மின்னஞ்சல் ஐடி அப்டேட் 
- பிறந்த தேதி அப்டேட் 
- பாலின அப்டேட் 
- பயோமெட்ரிக் அப்டேட்கள்


ஆன்லைன் அப்பாயிண்ட்மெண்ட்டை எவ்வாறு ஷெட்யூல் செய்வது
* https://uidai.gov.in/ க்குச் செல்லவும்.
* My Aadhaar என்பதைக் கிளிக் செய்து, Book a appointment கிளிக் செய்யவும்.
* பின்னர் உங்கள் நகரம் மற்றும் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* Proceed to book appointment என்பதைக் கிளிக் செய்யவும்.
* மொபைல் எண்ணை உள்ளிட்டு, 'புதிய ஆதார்' அல்லது 'ஆதார் புதுப்பிப்பு' ஐ கிளிக் செய்யவும்.
* கேப்ட்சாவை உள்ளிட்டு, OTP ஐ உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
* OTP ஐ உள்ளிட்டு சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.
* ஆதாரத்துடன் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முகவரி விவரங்களை உள்ளிடவும்.
* டைம் ஸ்லாட்டைத் தேர்ந்தெடுத்து நெக்ஸ்ட் என்பதைக் கிளிக் செய்யவும்.
* இதைச் செய்வதன் மூலம் உங்கள் Appointment முடிவடையும்.


ALSO READ | Aadhaar Card: மக்களுக்கு நல்ல செய்தி அளித்தது UIDAI, இனி பணிகள் இன்னும் சுலபமாகும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR