PAN-Aadhaar Linking: பான்-ஐ ஆதார் உடன் இணைப்பதற்கான காலக்கெடுவாக ஜூன் 30 ஐ அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் ஆதார் உடன் பான்-ஐ இணைக்கத் தவறினால், வங்கியின் சேமிப்புக் கணக்கிலிருந்து சம்பாதித்த வட்டிக்கு 20 சதவீதம் என்ற விகிதத்தில் வரி செலுத்த வேண்டியிருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், உங்கள் கணக்கிலிருந்து நீங்கள் செய்யும் பரிவர்த்தனைகளும் நிறுத்தப்படலாம். ஏனென்றால், ஆதார் பான் உடன் இணைக்கப்படாவிட்டால், பான் செல்லாமல் போகும் அல்லது செயலிழக்கப்படும். இதன் பொருள் என்னவென்றால், வங்கியில் உங்கள் பான் இருக்காது, அதனால், வருமான வரிச் சட்டத்தின்படி நீங்கள் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். அதனால்தான் பான்-ஆதார் இணைப்பை அரசாங்கம் நிர்ணயித்துள்ள கால அளவிற்குள் செய்து முடிப்பது அவசியமாகும்.


வரி நிபுணர் சி.ஏ. மணீஷ் குப்தா, ஜூன் 30 க்குள் உங்கள் பான் ஆதார் உடன் (Aadhaar Card) இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் பான் (நிரந்தர கணக்கு எண்) செயலிழக்கப்படும் என்று கூறியுள்ளார். வருமான வரிச் சட்டத்தின்படி, இதன் விளைவு என்னவாக இருக்கும்? 


உங்கள் டேக்ஸ் டிடக்ஷன் அட் சோர்ஸ் (TDS) எங்கெல்லாம் கழிக்கப்படுகிறதோ, அந்த விகிதம் 20 சதவீதமகிவிடும். உங்களுக்கும் வங்கியில் கணக்கு இருந்து, ரூ .10,000 க்கும் அதிகமான வட்டி கிடைத்தால், உங்கள் வரியில் 20% கழிக்கப்படும்.


வங்கி கணக்கு செயலற்றதாகிவிடும் 


பான்-ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், உங்களிடம் பான் இல்லாதது போல் கருதப்படும் என்று சி.ஏ. குப்தா கூறுகிறார். அத்தகைய சூழ்நிலையில், KYC இல் சிக்கல் ஏற்படும். இதன் காரணமாக, எதிர்காலத்தில், உங்கள் வங்கி கணக்கிலிருந்து பரிவர்த்தனைகள் நிறுத்தப்படக்கூடும். பான் செயலிழந்தால், வங்கிக் கணக்கு பரிவர்த்தனை நிறுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் கணக்கும் செயலற்றதாகி விடும். அதாவது, இது ஒரு செயலற்ற கணக்காக கருதப்படும். 


ALSO READ: ஆதார் பான் இணைப்பை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் எளிதாக செய்து முடிக்கலாம்: வழிகள் இதோ


இதன் பிறகு, உங்கள் பானை (PAN) ஆக்டிவேட் செய்து வங்கியில் தெரிவித்தபின்னர்தான் உங்கள் வங்கி கணக்கு மறு மதிப்பீடு செய்யப்படும். ஆகையால், பான் மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால், நீங்கள் அதிக பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆகையால் இதை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிப்பது நல்லது. 


PAN ஐ ஆதார் உடன் இணைப்பது எப்படி? 


- வருமான வரித்துறையின் (Income Tax Department) புதிய வலைத்தளமான www.incometax.gov.in. -க்கு செல்லவும். 


- இதில், 'Our services' க்கு சென்று 'Link Aadhaar'-ல் கிளிக் செய்யவும்.


- உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணை இங்கே உள்ளிடவும்.


- உங்கள் ஆதார் மற்றும் பான்-ல் உள்ள பெயர் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.


- உங்கள் ஆதார் அட்டையில் நீங்கள் பிறந்த ஆண்டு இருந்தால், கீழே உள்ள ஒரு சிறிய பெட்டியைக் கிளிக் செய்யவும்.


- இதற்குப் பிறகு 'Link Aadhaar'-ஐக் கிளிக் செய்யவும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.


- இந்த வழியில் உங்கள் பான் ஆதார் உடன் இணைக்கப்படும்.


ALSO READ: Aadhaar Photo Change: ஆதாரில் புகைப்படத்தை மாற்றுவதற்கான எளிய செயல்முறை இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR