ஆதார் பான் இணைப்பை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் எளிதாக செய்து முடிக்கலாம்: வழிகள் இதோ

பான் ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், நிதி பரிவர்த்தனைகள், வங்கி செயல்முறைகள், சொத்து வாங்கும் செயல்முறைகள் என அனைத்தும் பாதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 5, 2021, 06:29 PM IST
  • பான் கார்டை ஆதார் உடன் இணைப்பதற்கான கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • இணைக்கப்படாத பான் அட்டையை வைத்திருப்பவர்கள் பான் அல்லாதவர்களாக கருதப்படுவார்கள்.
  • இந்த இணைப்பை ஆன்லைனிலோ அல்லது ஆஃப்லைனிலோ உடனடியாக செய்து விடுவது அவசியமாகும்.
ஆதார் பான் இணைப்பை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் எளிதாக செய்து முடிக்கலாம்: வழிகள் இதோ  title=

புதுடெல்லி: பான் கார்டை ஆதார் உடன் இணைப்பதற்கான கால அளவு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை ஆன்லைனில் செய்ய ஏராளமான மக்கள் வருமான வரி வலைத்தளத்தை அணுகுவதால், அவ்வப்போது, வலைத்தளம் செயலிழந்து விடுகிறது. அவ்வப்போது இணயம் மூலம் இந்த பணியை செய்வதில் பிரச்சனை வருவதால், ஆஃப்லைன் இல் இதை செய்யும் எளிமையான வழியையையும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. அந்த மாற்று வழியை இங்கே தெரிந்து கொள்ளலாம். இந்த வழியை பின்பற்றி நீங்கள் ஆஃப்லைனில் எப்படி இந்த வேலையை செய்வது என்பதை இங்கே பார்க்கலாம். 

ஆதார் அட்டை மற்றும் பான் கார்டை ஆஃப்லைனிலும் இணைக்க முடியும். 

உங்களிடம் ஆன்லைன் வசதி இல்லையென்றாலும், நீங்கள் எஸ்எம்எஸ் வழியாகவும் இந்த பணியை செய்து விடலாம். 
இதற்காக, உங்கள் மெசேஜ் பாக்சில், UIDPN என்று டைப் செய்து ஸ்பேசிற்கு பிறகு PAN மற்றும் Aadhaar எண்ணை உள்ளிடவும். இந்த தகவல்களை 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பவும். இதன் பின்னர் உங்கள் பான் ஆதார் உடன் இணைக்கும் பணியைத் துறை தொடங்கும்.

ALSO READ:  பெரிய நிவாரணம்! Aadhaar PAN Link: ஆதார் - பான் இணைப்பு; கால அவகாசம் நீட்டிப்பு!

பான் கார்டை ஆதாருடன் இணைப்பது மிகவும் அவசியம். 

பான் கார்டை ஆதாருடன் (Aadhaar) இணைப்பது மிக அவசியமாகும். தற்போது நீட்டிக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்துக்குள் இதை செய்யத் தவறினால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் இணைக்கப்படாத பான் அட்டையை வைத்திருப்பவர்கள் பான் அல்லாதவர்களாக (Non-Pan Holders) கருதப்படுவதோடு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 272 பி இன் கீழ் அவர்ளுக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம் என்று வருமான வரித் துறை கூறியுள்ளது. 

ஒரு நபர், தற்போது நீட்டிக்கப்பட்டிருக்கும் தனது பானை கடைசி தேதிக்குள் ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால், அவரது பான் அட்டை செயலில் இருக்காது. அதாவது, அவரது பான் கார்டை நிதி பரிவர்த்தனைகளில் பயன்படுத்த முடியாது. பான் கார்டு தேவைப்படும் இடங்களில், அதை பயன்படுத்த முடியாது. இதன் நேரடி தாக்கம் அனைத்து வகையான வங்கி பரிவர்த்தனைகள் (Bank Transactions), டிமேட் கணக்குகள், புதிய வங்கி கணக்குகள் ஆகியவற்றில் இருக்கும்.

பான் கார்டை ஆதார் உடன் இணைப்பதற்கான தேதி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த இணைப்பை ஆன்லைனிலோ அல்லது ஆஃப்லைனிலோ உடனடியாக செய்து விடுவது அவசியமாகும். நிதி பரிவர்த்தனைகள், வங்கி செயல்முறைகள், சொத்து வாங்கும் செயல்முறைகள் என அனைத்தும் இதை இணைக்காவிட்டால் பாதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: SBI வழங்கும் Yono சூப்பர் சேவிங் சேல்: 50% வரை தள்ளுபடி, கேஷ்பேக் அனைத்தும் கிடைக்கும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News