புது தில்லி: வாடிக்கையாளர்களுக்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) ஒரு ஆலோசனையைப் பகிர்ந்துள்ளது. அதில் அவர்கள் ஆபத்தான வங்கி வைரஸ் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளனர். செர்பரஸ் (Cerberus) என்ற ஆபத்தான தீம்பொருளின் உதவியுடன் கணக்கு வைத்திருப்பவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். இந்த தீம்பொருள் பயனர்களுக்கு பெரிய சலுகைகள் பற்றிய தகவல்களை போலி எஸ்எம்எஸ் (SMS) அனுப்பி, அந்த லிங்கை கிளிக் செய்தபின் அல்லது பயன்பாடுகளைப் பதிவிறக்கிய பின், வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணம் வேட்டையாடப்படுகிறது. அத்தகைய பயன்பாடுகளின் நோக்கம் கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்குகளில் இருந்து பணத்தை எடுப்பது தான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்பிஐ (SBI) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பெரிய சலுகைகளுடன் அல்லது தற்போதைய தொற்றுநோய்களை மேற்கோள்காட்டி உங்கள் கணக்கில் பணம் வந்துள்ளது என பேராசைக்காட்டி வரும் போலி எஸ்எம்எஸ்ஸைத் தவிர்க்கவும். அந்த லிங்கை சரியாக கண்காணிக்காமல் பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அந்த எஸ்‌எம்‌எஸ்-ல் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என வரும். அதை கிளிக் செய்ய வேண்டாம். இது உங்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும. 


மேலும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி இடுகையில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளது. அதற்கு "செர்பரஸ் எச்சரிக்கை" (Cerberus Alert) என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சமீபத்தில் வெளியான வலைத் தொடரான ​​ஹேடஸால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.


மேலும் படிக்கவும்: EMI செலுத்துவதற்கான அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு...


தற்போதைய தொற்றுநோயைப் பற்றிய பெரிய சலுகைகள் அல்லது தகவல்களை வழங்குவதாக கருதப்படும் போலி எஸ்எம்எஸ் அல்லது போலி பயன்பாடுகளைப் பதிவிறக்குவது குறித்து எச்சரிக்கையாக இருங்கள், ஏனெனில் அவை உங்களை ஏமாற்றுவதாகும். ஃபிஷிங் இணைப்புகளை http://www.cybercrime.gov.in க்கு புகாரளிக்கவும்.