மூத்த குடிமக்களுக்கு அதிர்ச்சி... உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - இனி ரயில்களில் சலுகை கிடையாது?
Senior Citizens Concession: ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டண சலுகை, கொரோனா தொற்று காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், அதனை திரும்ப வழங்கக்கோரிய மனுவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Senior Citizens Concession: இந்தியன் ரயில்வே பல கோடி இந்தியர்களால் பயன்படுத்தப்படுவதற்கு முக்கிய காரணம், அதன் சேவை மற்றும் எளிமை அணுகுமுறை தான். இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை ரயில் சேவைகளை பயன்படுத்தி, நீண்ட தூர பயணங்களையும் எளிதாக மேற்கொள்கின்றனர்.
பல்வேறு முக்கிய நகரங்களுடனான இணைப்பு, விரைவான சேவை உள்ளிட்டவை ரயில்வே துறையில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். அதுமட்டுமில்லாமல், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் போன்றோருக்கு டிக்கெட் தொகையில் தள்ளுபடி அளிப்பது மட்டுமின்றி, முன்பதிவில் முன்னுரிமை, ஒதுக்கப்படும் இருக்கைகளின் முன்னுரிமை என பல்வேறு சேவைகள் உள்ளன. எனவே, தான் அவர்களுக்கு ஏதுவான போக்குவரத்து சேவையில் ரயில் முதன்மையான இடத்தை பெறுகிறது.
மனு தள்ளுபடி
அந்த வகையில், மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் கட்டணத்தில் மீண்டும் சலுகை அளிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஏப். 27) தள்ளுபடி செய்தது. இதனால், மூத்த குடிமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஏனெனில் இனி ரயில் டிக்கெட்டுகளில் கிடைக்கும் தள்ளுபடியின் பலனை அவர்களால் பெற முடியாது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, சில சலுகைகள் நிறுத்திவைக்கப்பட்டது. நிறுத்திவைக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கக் கோரி எம்.கே.பாலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ், இதுபோன்ற மனுவில் இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பது பொருத்தமாக இருக்காது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மூத்த குடிமக்களின் தேவைகளையும், நிதி விளைவுகளையும் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் அரசு முடிவெடுக்க வேண்டும். மனுதாரரின் வாதத்தை நிராகரித்த அமர்வு, முதியோர்களுக்கு சலுகை அளிப்பது மாநிலத்தின் பொறுப்பு, மத்திய அரசின் பொறுப்பு அல்ல என்று அறிவித்தது.
ஏன் நிறுத்திவைக்கப்பட்டது?
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் நடமாட்டத்தை குறைக்கவும், 2020இல் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மத்திய அரசு நிறுத்தியது. தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பு மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மீண்டும் அறிமுகப்படுத்த பாராளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் பரிந்துரைத்தது.
முன்பு எவ்வளவு தள்ளுபடி?
இந்திய ரயில்வே 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீத கட்டணச் சலுகையும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதச் சலுகையும் வழங்கியது வந்தது. உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பால் இது இனி கிடைக்காது என கூறப்படுகிறது. ஒருவேளை, மத்திய அரசு தலையிட்டு இதன் மீது உத்தரவு பிறப்பித்தால், முதியோர்களுக்கு மீண்டும் ரயில் சேவையில் சலுகைகள் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
கொரோனா காலத்தில் ரயில்வே துறையால் முடக்கப்பட்ட அனைத்து வசதிகளும் மீண்டும் நடைமுறைக்கு வந்துவிட்ட போதிலும், மூத்த குடிமக்களின் கட்டண சலுகை மீண்டும் தொடங்கப்படவில்லை என பயணிகள் கவலை தெரிவித்து வந்தனர். தொடர்ந்து, பலரும் இதுகுறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்தும் வந்தனர்.
இதுகுறித்து, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,"ரயில்வேயில் பயணிகளுக்கு ஏற்கனவே 55 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்நிலையில், ரியில்வே துறையின் வருமானம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், கட்டணச் சலுகை மீண்டும் தொடங்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது" என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உங்கள் ரயில் டிக்கெட்டில் வேறொருவரை பயணம் செய்ய வைப்பது எப்படி தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ