Indian Railways New Feature: இந்திய ரயில்வே தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது சிறந்த வசதிகளை வழங்குகிறது. ரயில்வேயில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IRCTC டிக்கெட் முன்பதிவு அமைப்பில் புதிய அம்சத்தை சேர்க்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, இணையதளத்தில் உங்கள் தகவல்களை நிரப்ப வேண்டியிருந்தது. அதற்காக நீங்கள் தட்டச்சு செய்யும் உதவியைப் பயன்படுத்துவீர்கள், ஆனால் இந்த புதிய அம்சத்தின் உதவியுடன், நீங்கள் குரல் வழியாகவே, அதவாது பேசியே டிக்கெட்டுகளையும் பதிவு செய்யலாம். இந்த புதிய அம்சத்தின் மூலம், தகவல்களை நிரப்புவதில் உள்ள சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள்.


மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு இலவச உணவு... மூன்று வேளைக்கும் பெறலாம் - இதை மறக்காதீர்கள்!


தொலைநோக்கு அம்சம்


IRCTC இன் இந்த மேம்பட்ட அம்சத்தின் உதவியுடன், பயணிகள் இப்போது குரல் வழியாகவே தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இதன் மூலம் டிக்கெட் எளிதாக பதிவு செய்யப்படும். உலகம் AI ChatBot நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், இந்திய ரயில்வே தனது செயலியை இன்னும் மேம்பட்டதாக மாற்றியுள்ளது. ஆஸ்க் திஷாவில் (IRCTC Ask Disha 2.0) பல முக்கிய மாற்றங்களைச் செய்யத் தயாராகி வருகிறது. 


புதிய அம்சத்துடன் மக்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய குறைந்த நேரத்தை எடுத்துக் கொள்வார்கள். தற்போது, அதன் சோதனை பதிப்பு தொடங்கப்பட்டுள்ளது மற்றும் சோதனை செயல்முறை வெற்றியடைந்த பிறகு, இது அனைத்து பயணிகளுக்கும் திறக்கப்படும்.


IRCTC-இன் ஆஸ்க் திஷா 2.0 மூலம், குரல் கட்டளையின் விருப்பம் அனைத்து பயணிகளுக்கும் விரைவில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இது தவிர, டிக்கெட்டின் பிரிவியூ, பிரிண்ட் மற்றும் ஷேர் விருப்பமும் கிடைக்கும். இதில், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் தேர்ந்தெடுக்கலாம். அனைத்து வகுப்பு பயணிகளும் தற்போதைய குரல் கட்டளை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு விரைவில் அனைவருக்கும் கிடைக்கும்.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு பம்பர் அறிவிப்பு: விரைவில் ரயில் டிக்கெட்டில் 55% தள்ளுபடி? அப்டேட் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ