நியாய விலைக் கடைகளில் திருட்டை தடுக்கவும், பயனாளர்களுக்கு உரிய பொருட்கள் குறைந்த விலையில் கொண்டு சேர்ப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் பயோ மெட்ரிக் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் தமிழக அரசு, விரைவில் புதிய மைல் கல்லை எட்ட இருக்கிறது. அதாவது, ரேஷன் கடைகளுக்கு ரேஷன் அட்டையை எடுத்து செல்ல தேவையில்லை என்ற சூழல் விரைவில் வர இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இலவச ரேஷன் வாங்குபவரா நீங்கள்? அப்போ இந்த செய்தியை உடனே படியுங்கள்


உங்கள் கண்களை காண்பித்து ரேஷன் பொருட்களை நீங்கள் வாங்கிச் செல்லலாம். தமிழக உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, கருவிழி ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்து ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் ரேஷன் கடைகளை கண்காணிக்கும் செயலி தொடக்க விழாவில் பங்கேற்றார். அப்போது செயலியை அறிமுகம் செய்து வைத்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.  


அதில், " நியாயவிலை கடைகளில் 98.3 சதவிகிதம் பேர் பயோ மெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கி வருகிறார்கள். திருவல்லிக்கேணி , அரியலூர் மாவட்டங்களில் சோதனை முறையில் கருவிழி ஸ்கேனர் மூலம் பொருட்கள் விநியோகிக்கபட்டு வருகிறது. விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்த முதல்வரிடம் பரிந்துரைக்கப்படும். அதேபோல் ஜனவரி மாதம் முதல்  தர்மபுரி நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் சிறுதானியங்கள் சோதனை முறையில் நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யபட உள்ளது. பொதுமக்களின் வரவேற்பை பொருத்து மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். 


மேலும் படிக்க | EPFO: ஓய்வூதிய திட்டத்தில் அசத்தல் மாற்றங்கள், மக்களுக்கு பம்பர்


கிடங்குகளிலிருந்து அரிசி கடத்தலை தடுக்க 2886 கேமராக்கள் பொறுத்த டெண்டர் கோரபட்டுள்ளது. அதேபோல் பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் பொறுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து நேரடியாக அரவை ஆலைகளுக்கு எடுத்து சென்று பின்னர் அவை உணவு தானிய கிடங்குகளில் கொண்டு சேர்க்கும் வகையில் டெண்டர் விடுவதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.


மேலும் படிக்க | Ration Card: ரேஷன் கடைகளை கண்காணிக்க புதிய செயலி தொடக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ