டிஏ அரியர் தொகை, சமீபத்திய அப்டேட்: மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக அரசின் சில முக்கிய முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். அவற்றில் 18 மாத டிஏ அரியர் தொகை, பழைய ஓய்வூதியத் திட்டம், 8 ஆவது ஊதியக்குழு ஆகியவை அடங்கும். இதில் 18 மாத டிஏ அரியர் தொகையை அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என கோரி பல பேச்சுவார்த்தைகளும் கூட்டங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில் டிஏ அரியர் தொகை குறித்த ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

18 மாத அகவிலைப்படி அரியர் தொகைக்காக நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மோடி அரசு தற்போது ஒரு பரிசை வழங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து முழு வீச்சில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தொகை பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் அவதியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். 


டிஏ உயர்வு: அறிவிப்பு எப்போது?


இதுதவிர டிஏ -வை உயர்த்தும் அறிவிப்பையும் அரசு விரைவில் வெளியிடக்கூடும் என சொல்லப்படுகின்றது. அரசு இந்த அறிவிப்பை என்று வெளியிடும் என இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. எனினும், ஆகஸ்ட் 25 ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என சில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால் அது ஆகஸ்ட் மாதத்தில் ஊழியர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசாக இருக்கும். இதனால் சுமார் 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள். 


ஊழியர்களின் அகவிலைப்படி ஏன் முடக்கப்பட்டது? 


நீண்ட நாட்களாக ஊழியர்களின் கனவாக இருந்துவரும் டிஏ அரியர் தொகை அவர்களது கணக்குகளில் வரவு வைக்கப்படால், அது அவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும். கொரோனா பெருந்தொற்று உலகை ஆட்கொண்ட காலத்தில், அப்போது ஏற்பட்ட அசாதாரண நிலையை சமாளிக்க அரசு, ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை ஊழியர்களின் அகவிலைப்படியை முடக்கியது. அந்த தொகை நலிந்த, அதிக தேவையில் இருந்த மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது.


நிலைமை சரியான பின்னர், ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஒன்றாக சேர்த்து கொடுக்கப்பட்டது. ஆனால், முடக்கப்பட்ட காலத்தின் அரியர் தொகை அளிக்கப்படவில்லை. இந்த தொகையை தான் ஊழியர்கள் அரசிடம் கோரி வருகிறார்கள்.  இப்போது இந்த தொகையை அரசாங்கம் விரைவில் ஊழியர்களுக்கு கொடுக்கும் என்று கூறப்படுகின்றது. அப்படி நடந்தால், முதல் வகுப்பு ஊழியர்களுக்கு, 2 லட்சத்துக்கும் மேல் பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் பொதுத்தேர்தல்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் மத்திய அரசு ஊழியர்களை மகிழ்விக்க இந்த முடிவை எடுக்கக்கூடும் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். 


அகவிலைப்படி உயர்வு: 


ஜூன் 2023 ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 46 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என்ற ஊடக அறிக்கைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பான அறிவிப்பு செப்டம்பர் மாதம் அரசால் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட ஃபார்முலா, டிஏவை உயர்த்துவதற்காகப் பின்பற்றப்படும்.


மேலும் படிக்க | 7th Pay Commission பம்பர் செய்தி: 46% டிஏ... ஊதிய உயர்வு எவ்வளவு? முழு கணக்கீடு இதோ


அகவிலைப்படி 46% ஆனவுடன் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?


குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு: டிஏ உயர்வு


1. அடிப்படை சம்பளம் - ரூ 18,000


2. தற்போதைய டிஏ 42 சதவீதம் - டிஏ உயர்வு மாதத்திற்கு ரூ.7,560


3. புதிய டிஏ 46 சதவீதம் - டிஏ உயர்வு மாதத்திற்கு ரூ.8,280


4. டிஏ அதிகரிப்பு - ரூ 8,280- 7,560 = ரூ 720 / மாதம் 


5. ஆண்டு சம்பள உயர்வு ரூ 720 X 12= ரூ 8,640


அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு: டிஏ உயர்வு


1. அடிப்படை சம்பளம் - ரூ 56,900


2. தற்போதைய டிஏ 42 சதவீதம் - மாதம் ரூ 23,898


3. புதிய டிஏ 46% - டிஏ உயர்வு மாதத்திற்கு ரூ.26,174


4. டிஏ அதிகரிப்பு - ரூ 26,174 - ரூ 23,898 = ரூ 2,276 / மாதம் 


5. டிஏவில் ஆண்டு அதிகரிப்பு - ரூ 2,276 X 12 = ரூ 27,312


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு 3 நல்ல செய்திகள்: 50% டிஏ விரைவில்.. ஊதியம் மற்றும் எச்ஆர்ஏ -வில் அதிரடி உயர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ