Income Tax Latest Update: வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. நீங்கள் எந்த வரி முறையைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் இருந்தால், கவலைப்படத் தேவையில்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளார். அதன் பிறகு வரி செலுத்துவோர் வரி செலுத்தும் போது பெரும் தள்ளுபடியின் பலனைப் பெறுகிறார்கள். வரி செலுத்தும் போது கூடுதல் விலக்குகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் எந்த வரி முறை உங்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த வரி முறையை தேர்வு செய்வது?


இந்த நேரத்தில், நீங்கள் உங்களுக்கு ஏற்ற வரி முறையை நீங்கள் தேர்வு செய்யலாம். புதிய வரி முறை அல்லது பழைய வரி முறை என உங்களுக்கு எது ஏற்றதோ அதை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். புதிய வரி விதிப்பில், நீங்கள் 7 லட்சம் வரை விலக்கு பெறுவீர்கள். புதிய வரி விதிப்பு முறை 2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், நிதி அமைச்சர் இந்த வரி முறையை டீஃபால்ட் முறையாக, அதாவது இயல்புநிலை முறையாக அறிவித்தார். 


புதிய வரி விதிப்பில் இவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை


புதிய வரி விதிப்பு பற்றி பேசுகையில், 3 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது. இதனுடன், 7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் வரிச் சலுகையைப் பெறுவார்கள். அதன் பிறகு அவர்களும் வரி செலுத்த வேண்டியதில்லை. இதனுடன், வரி அடுக்கும் குறைக்கப்பட்டுள்ளது.


புதிய வரி விதிப்பில் எத்தனை அடுக்குகள் உள்ளன?


0 முதல் ரூ. 3 லட்சம் = 0
ரூ. 3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் = 5 சதவீதம்
ரூ. 6 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் = 10 சதவீதம்
ரூ. 9 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் = 15%
ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் = 20 சதவீதம்
ரூ. 15 லட்சத்திற்கு மேல் = 30%


மேலும் படிக்க | வரி செலுத்துவோருக்கு முக்கிய அப்டேட்: ஐடிஆர் படிவங்களை வெளியிட்டது வருமான வரித்துறை


பழைய வரி முறை


இது தவிர, பழைய வரி முறையைப் பற்றி பேசினால், 2.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு விலக்குக்கான பலன் கிடைக்கும். இது தவிர, 2.5 முதல் 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 5% வரி செலுத்த வேண்டும். ஆனால் இவர்களும் ரூ.12,500 வரை விலக்கு பெறுகிறார்கள். இதில், 5%, 20% மற்றும் 30% வரை வரி செலுத்த வேண்டும். பழைய வரி முறையில், பிரிவு 80C இன் கீழ் நீங்கள் விலக்கு பெறுவீர்கள், அதில் நீங்கள் வரியைச் சேமிக்கலாம்.


பழைய வரி முறையின் வரி அடுக்குகள்:


பழைய வரி முறை (60 வயதுக்குட்பட்ட வரி செலுத்துவோருக்கு)
0 முதல் ரூ. 2.5 லட்சம் = 0
ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் = 5 சதவீதம்
ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் = 20 சதவீதம்
ரூ. 10 லட்சத்திற்கு மேல் = 30%


வரி கால்குலேட்டரின் உதவியுடன் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம் 


வரி விதிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது எந்த முறையை தேர்ந்தெடுத்தால் குறைந்த வரியை செலுத்தலாம் என்பதை அறிய அனைவருக்கும் ஆவலாக இருக்கும். அதை அறிய விரும்பினால், அதற்கு வரி கால்குலேட்டரின் உதவியைப் பெறலாம். வருமான வரித் துறை புதிய வரி விதிப்பை இயல்புநிலையாக மாற்றியுள்ளது. அதன் பிறகு ஒரு கால்குலேட்டரையும் வெளியிட்டுள்ளது. இதனால் வரி செலுத்துவோர் கணக்கீட்டில் எந்த சிக்கலையும் சந்திக்காமல் வரியை கணக்கிட்டு வரி முறையை தேர்வு செய்ய முடியும். 


மேலும் படிக்க | PAN Card Limit: 2 பான் கார்ட் வைத்து இருந்தால் இவ்வளவு தண்டனையா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ