கயாவில் உள்ள நந்தி சிலை பக்தர்கள் வழங்கும் பாலை உட்கொள்கிறது என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகாரில் சிவன் கோயிலில் உள்ள நந்தி சிலை ஒன்று பக்தர்கள் கொடுக்கும் பாலையும், தண்ணீரையும் அருந்துவதாக உள்ளூர்வாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புத்த கயாவில் உள்ள சிறிய சிவன் கோயிலில் உள்ள நந்தி சிலை ஒன்று பால் அருந்துவதாக அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தகவல் கூறவே, அதனைக் கேட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வந்து நந்தி சிலைக்கு சிலைக்கு பால் மற்றும் தண்ணீரை வழங்கி வருகின்றனர்.


"புனித மாதமான ஷ்ரவன் மாதத்தில் நந்தியின் சிலை பால் மற்றும் தண்ணீரை குடித்து வருகிறது என்பது உண்மைதான்" என்று உள்ளூர்வாசி சுமித் குமார் கூறினார். லக்னோவில் உள்ள ஒரு கோவிலில் நந்தி சிலை குடிநீரைப் பருகுவதாக தகவல் வெளியானது, ஆனால் அதை கோவில் பாதிரியார் நிராகரித்தார்.


கோவிலின் பாதிரியார் பிரமா தேவ் தாஸ் முன்பு செய்தியாளர்களிடம் கூறுகையில்; "நந்தி பாபா ஒரு சொட்டு தண்ணீர் கூட குடித்ததில்லை" என்று கூறினார். இதே போல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் விநாயகர் சிலை பால் குடிப்பதாக வந்த தகவலையடுத்து நடந்த ஆராய்ச்சியில் சவ்வூடு பரவல் முறையில் பால் சிலையின் உள்ளே இழுக்கப்படுவதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.