வாழ்க்கையில் சுவை சேர்ப்பது பாலியல் வாழ்க்கை. அது நல்லது தான். ஆனால் அதற்காக செய்யப்படும் கொடுமைகள் யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாதவை. அழகுக்கும், மேம்பட்ட பாலியல் வாழ்க்கைக்கும் பெண்களுக்கு மெல்லிய பாதம் இருக்க வேண்டும் என்பது சீனாவின் நம்பிக்கை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் அதற்காக பெண்களுக்கு மிகுந்த வலி கொடுக்கும் கால்கள் கட்டும் வலிமிக்க பாரம்பரியம் சீனாவில் பின்பற்றப்பட்டது. சீனாவில் இதுபோன்ற பல மரபுகள் உள்ளன, அவை யாராலும் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாதவை. திருமண சடங்குகள் முதல் சீனர்களின் அன்றாட வாழ்க்கை வரை் அனைத்திலும், பாரம்பரியமும் மரபுவழி கருத்துக்களும் விரவிக் கிடக்கிறது. 


சீனர்களின் இத்தகைய விசித்திரமான பாரம்பரியங்களில் ஒன்றுதான், பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பால்ய பருவத்திலேயே பெண்களின் கால்களை இறுக்கமாக கட்டுப்போடும் பழக்கம்.


Also Read | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!


இந்த பாரம்பரியம் மிகவும் வேதனையானது, இதில் பெண்களின் வலியும் வேதனையும் சொற்களிடம் அடங்காதவை. அழகே பிரதானம், பெண் ஒரு பாலியல் பொம்மை என்பது போன்ற எண்ணத்தைக் கொடுக்கும் பாரம்பரியத்தை கேட்பவர்களால் ஜீரணிக்க முடியாது என்றாலும், இது கசப்பான உண்மை.


இந்த பாரம்பரியம் சீனாவில் மட்டுமல்ல, ஜப்பான் மற்றும் தைவானிலும் கடைபிடிக்கப்படுகிறது. சீனாவில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த பாரம்பரியத்தால், பெண்கள் பல ஆண்டுகளாக கால்களை கட்டி வைத்திருக்கின்றனர்.


 
இது சீனாவின் பணக்காரக் குடும்பங்களில் முக்கியமாக கடைபிடிக்கப்படுகிறது. அங்குள்ள செல்வந்தர்கள், குறுகிய கால்கள் கொண்ட பெண்களை மட்டுமே அழகாகவும் சரியான பாலியல் துணையாகவும் கருதுவதால், இந்த பாரம்பரியம் தொடர்கிறது. ஆனால், மிகவும் வேதனை கொடுக்கும் இந்த பழக்கத்தை சீனாவில் இன்றைய பெண்களில் பெரும்பாலானவர்கள் ஏற்க மறுக்கின்றனர். சீனாவில் மனித உரிமைகள் என்று எதுவும் இல்லை என்பது வெளிப்படையான விஷயம். 


இந்த கால்கட்டும் பழக்கத்திற்கு ”தாமரைக் கால்” என்று பெயர். பெண்களின் கால்கள் வளராமல் இருக்க வேண்டும் என்பதற்காக திருக்க மிகுந்த வலி ஏற்படும் வண்ணம் இறுகக் கட்டும் வழக்கத்திற்கு ‘கால் கட்டுதல்’, ‘தாமரைக் கால்’ என்று சொல்கின்றனர்.


Also Read | Neanderthals: மனிதர்களுடன் உடலுறவு கொண்டதால் நியண்டர்டால்கள் அருகியிருக்கலாம்: ஆய்வு


இந்த பாரம்பரியத்தை பின்பற்றாத பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நடக்கும் வழக்கமும் உண்டு. இந்த வழக்கத்தை ஏற்றுக்கொள்ளாத பெண்ணுக்கு  திருமணம் நடக்காது, அதுமட்டுமல்ல அந்தப் பெண்ணின் தோலின் ஒரு பகுதி துண்டிக்கப்படும்.  


அதுமட்டுமல்ல, நீண்ட காலமாக காலைக் கட்டிக் கொண்டிருப்பதால், பல பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும்  உடல் குறைபாடு ஏற்பட்டுவிடும். இத்தகையக் குறைபாடுகளுடன் இன்றும் சில வயதான சீன மூதாட்டிகளை காணலாம். 
 
இருப்பினும், இப்போது பெரும்பாலான சீனப் பெண்கள் தாங்களாகவே திருமணம் பற்றிய முடிவை எடுக்கிறார்கள். தாங்கள் விரும்பும் இளைஞனை திருமணம் செய்துக் கொள்கின்றனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆண் நண்பர்கள் உள்ளனர், திருமணத்திற்கு முன்பு அவர்களுடன் நேரம் செலவழித்து திருமணத்திற்கு தங்களை தயார் செய்து கொள்கிறார்கள். சுமார் 60% சீனப் பெண்கள் திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்கிறார்கள் என்பதும் கூடுதல் தகவல்.


Also Read | சபாஷ்! சரியான கேள்வி! கொரோனா தடுப்பூசி போடாத ஒருவருடன் டேட்டிங் செய்வீர்களா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR