ஜாதகம் படுத்தும் பாடு! தனது 13 வயது மாணவரை வலுக்கட்டாயமாக மணந்து முதலிரவு கொண்டாடிய ஆசிரியை!
கலிகாலம் என்று சொல்வதை உண்மையாக்கும் வகையில் பல செய்திகளை கேள்விப்படுகிறோம். அதிலும், ஒரு ஆசிரியை செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக தன்னிடம் பாடம் படிக்கும் 13 வயது மாணவனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து முதலிரவும் நடத்தினார் என்ற செய்தி அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
கலிகாலம் என்று சொல்வதை உண்மையாக்கும் வகையில் பல செய்திகளை கேள்விப்படுகிறோம். அதிலும், ஒரு ஆசிரியை செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக தன்னிடம் பாடம் படிக்கும் 13 வயது மாணவனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து முதலிரவும் நடத்தினார் என்ற செய்தி அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
தனது ஆசிரியையின் குடும்பத்தினர் தனக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்ததாக 13 வயது மாணவன் புகாரளித்துள்ளான்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்த போதிலும், நம் நாட்டில் இன்னும் மூடநம்பிக்கை, சடங்கு-சம்பிரதாயங்கள் தொடர்பான எண்ணங்கள் (superstitious beliefs and practices) ஆழ வேரூன்றிப் போயிருக்கிறது என்பதை நிரூபிக்கும் மற்றொரு நிகழ்வு நிதர்சனத்தை காட்டுகிறது. ஜலந்தரின் பஸ்தி பாவா கெல் பகுதியில் வசிக்கும் ஆசிரியைக்கு செவ்வாய் தோஷத்தினால் திருமணம் தள்ளிப் போயிருக்கிறது. இதனால் கவலையடைந்த குடும்பத்தினர் இந்த முயற்சியை எடுத்ததாக, சம்பந்தப்பட்ட ஆசிரியர் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
Also Read | Instagram Filter போல தோற்றமளிக்க 30 லட்சம் ரூபாய் செலவு!
செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட சிறுவன் ஒருவனுடன் சம்பிரதாயமாக திருமணம் செய்தால் போதும், அது அடையாளமாக அதாவது சாஸ்திரப்படி செய்தால் போதும், அதன் பிறகு ஆசிரியைக்கு வழக்கமாக திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று குடும்ப ஜோதிடர் சொல்லியிருக்கிறார்.
ஜோதிடரின் வார்த்தையை அப்படியே ஏற்றுக் கொண்ட குடும்பத்தினர், மாணவனுக்கு வீட்டில் இருந்து டியூஷன் எடுப்பதாக நாடகத்தை அரங்கேற்றினார்கள். தங்கள் வீட்டிலேயே ஒரு வாரம் தங்கி படிப்பு சொல்லிக் கொடுப்பதாக பொய்யாயச் சொல்லி, 13 வயது மாணவனின் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கினார்கள். ஆனால், வீட்டில் திருமணத்தை செய்து முடித்துவிட்டார்கள்., இறுதியில் திருமணம் நடத்தப்பட்டது.
ஒரு வாரத்திற்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய சிறுவன் நடந்த விஷயங்கள் அனைத்தையும் தனது பெற்றோரிடம் சொன்னதும், கொதித்தெழுந்த குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
Also Read | ஜஸ்பிரித் பும்ரா-சஞ்சனா கணேசனின் திருமண சடங்குகள் அசத்தலான புகைப்படங்கள்
அந்த புகாரில், நலங்கு, திருமண சடங்குகள், முதலிரவு என அனைத்தையும் தன்னை கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமாக செய்ய வைத்ததாக சிறுவன் குற்றம் சாட்டினான். அதுமட்டுமல்ல, இந்த சடங்குகளுக்குப் பிறகு, ஆசிரியையின் வளையல்கள் உடைக்கப்பட்டு அவர் விதவையாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, கணவன் இறந்ததற்கான சடங்குகளையும் செய்திருக்கின்றனர் ஆசிரியையின் குடும்பத்தினர் என்பது அதிர்ச்சியை அதிகரிக்கிறது.
கணவனான சிறுவனுக்கு அவன் கண் முன்னரே இறுதிச் சடங்கையும் செய்துவிட்டு, தங்கள் வீட்டில் இருந்த ஒரு வாரத்திலும் கடுமையான வீட்டு வேலைகளை செய்ய வைத்துள்ளனர். இந்த அனைத்து விஷயங்களும் புகாராக கொடுக்கப்பட்டுள்ளது.
இறுதியில் சோகமான விஷயம் என்னவென்றால், சிறுவன் புகார் அளித்த பிறகு, ஆசிரியையின் குடும்பத்தினர் சமரசம் பேசியதை அடுத்து, இரு தரப்பினரும் சமாதானமாகிவிட்டனர். புகாரும் வாபஸ் பெறப்பட்டது என பாஸ்தி பாவா கேல் காவல் நிலைய அதிகாரி ககன்தீப் சிங் செகோன் ஊடகத்திடம் தெரிவித்தார்.
Also Read | சிவலிங்கத்தை தினமும் பூஜை செய்வதற்கான காரணம் தெரியுமா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR