புதுடெல்லி: இப்போது நீங்கள் நாட்டில் அழகான இடங்களுக்கு மிக குறைந்த விலை டிக்கெட்டில் சுற்றி வரலாம். அதுமட்டுமின்றி, இப்போது விமானத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது எளிதாக இருக்கும். அனைத்து பக்கமும் விலை உயர்ந்து வரும் வேளையில், விமான நிறுவனமான இண்டிகோ பல புதிய நேரடி விமானங்களை இயக்கப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் நமது பயணிகளுக்கான பாயிண்ட் டு பாயிண்ட் இணைப்பை அதிகரிப்பதில் மற்றொரு முயற்சியை எடுத்துள்ளோம் என்று இண்டிகோ (IndiGo) நிறுவனம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இண்டிகோ விமான நிறுவனம் தகவல்:
பாயிண்ட் டு பாயிண்ட் சேவை குறித்து விமான நிறுவனமான இண்டிகோ கூறுகையில், நேரடி இணைப்பு பயணத்தை மிகவும் எளிதாக்கும். அந்த பகுதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும். இயற்கை நிறைந்த அழகு, மாறுபட்ட கலாச்சாரம், புதுமையான அனுபவம் என பயணிகளுக்கு தங்கள் பயணத்தைத் திட்டமிடுவதற்கும் வசதியாக இருக்கும்.


முன்னதாக, கடந்த நவம்பர் 2 ஆம் தேதி முதல் ஷில்லாங் மற்றும் திப்ருகர் (Shillong and Dibrugarh) இடையே நேரடி விமான சேவையைத் (Direct Flight Service) தொடங்கியுள்ளது. இதன் தொடக்கக் கட்டணம் 1400 ரூபாய் மட்டுமே.


ALSO READ | Super Offer by Indigo: 915 ரூபாயில் விமானப் பயணம்! இண்டிகோவின் சூப்பர் சலுகை..!


எப்படி முன்பதிவு செய்வது?
நீங்களும் மலிவாகப் பயணம் செய்ய விரும்பினால், இண்டிகோவின் இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் விரிவான தகவல்களைப் பெறலாம். இது தவிர, பயணிகள் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.goindigo.in/ ஐப் பார்வையிடுவதன் மூலம் இண்டிகோ விமானங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.


12 மணிநேர பயணம் வெறும் 75 நிமிடங்களில்:
நேரடி போக்குவரத்து வசதி இல்லாததால், ஷில்லாங் மற்றும் திப்ருகார் இடையே பயணம் செய்ய மக்கள் சாலை மற்றும் ரயிலில் 12 மணிநேர நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இப்போது வெறும் 75 நிமிடத்தில் இரு நகரங்களுக்கு இடையே எளிதாக பறக்க முடியும்.


எந்தெந்த நகரங்களுக்கு எவ்வளவு கட்டணம்:
ஜம்மு டு லே (Jammu to Leh) - ரூ 1854
லே டு ஜம்மு (Leh to Jammu) - ரூ 2946
இந்தூர் டு ஜோத்பூர் (Indore to Jodhpur) - ரூ 2695
ஜோத்பூர் டு இந்தூர் (Jodhpur to Indore) - ரூ 2735
பிரயாக்ராஜ் டு இந்தூர் (Prayagraj to Indore) - ரூ 3429
இந்தூர் டு பிரயாக்ராஜ் (Indore to Prayagraj) - ரூ 3637
லக்னோ டு நாக்பூர் (Lucknow to Nagpur) - ரூ 3473
நாக்பூர் டு லக்னோ (Nagpur to Lucknow) - ரூ 3473


ALSO READ | நடுவானில் விமானத்தில் பிறந்த பெண் குழந்தை: கடவுளாய் வந்து உதவிய மருத்துவர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR