புதுடெல்லி: தற்போது விமான கட்டணங்கள் வானளவ உயர்ந்திருக்கும் நிலையில் வெறும் 915 ரூபாய்க்கு விமானப் பயணம் செய்யலாம் என்றால் ஆச்சரியமாக இருக்காதா? இது உண்மைதான். இந்த சலுகையை அறிவித்திருக்கிறது இந்தியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ.
வெறும் 915 ரூபாயில் விமானப் பயணம் என்ற சலுகையை இண்டிகோ அறிவித்துள்ளது. தனது விமானச் சேவையை தொடங்கி 15 ஆண்டு நிறைவானதை அடுத்து, இண்டிகோ நிறுவனம் இந்த சலுகையை அறிவித்துள்ளது.
விமான கட்டணம் 915 ரூபாய் என்பது அனைத்து கட்டணங்களையும் உள்ளடக்கியது. ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 6 வரையில் முன் பதிவு செய்து இந்த சலுகையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2021 செப்டம்பர் முதல் தேதியில் இருந்து அடுத்த ஆண்டு அதாவது 2022 மார்ச் 26 வரையில் பயணிப்பவர்கள் இந்த அதிரடி சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Also Read | வேலையின்மை விகிதம் எந்த நிலையில் உள்ளது; NSO கூறுவது என்ன..!
குறைந்த விலையில் விமான பயணச் சீட்டுகளை பதிவு செய்து, சிறப்பான பயணத்தினை மேற்கொள்ளுங்கள் என இண்டிகோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
2021 ஆகஸ்ட் நான்காம் தேதி மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி இரவு 12 மணி வரையில் முன் பதிவு செய்து கொள்ளலாம். 915 ரூபாய் கட்டணத்துடன் விமான நிலைய கட்டணம் மற்றும் அரசு விதிக்கும் வரிகள் செலுத்தவேண்டும். அதோடு, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணிகளுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
915 ரூபாய் பயணச்சீட்டு சலுகைத் திட்டத்தில், வங்கி கிரெடிட் கார்டு அட்டைகள் மற்றும் Ka-ching cardல் கூடுதல் சலுகைகள் உண்டு என இண்டிகோ தெரிவித்துள்ளது. இது தவிர கார் வாடகை சேவையும் 315 ரூபாய்க்கு கிடைக்கும்.
Also Read | 7th Pay Commission: ஊழியர்களின் சம்பளத்தில் 28% டி.ஏ வந்தது, உங்களுக்கு கிடைத்ததா?
HSBCS கடன் அட்டை (credit card) பயன்படுத்தி இந்த சலுகைத் திட்டத்தில் விமான டிக்கெட்டை பதிவு செய்தால், அதிகபட்சம் 5% அல்லது 750 ரூபாய் வரையில் கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும்.
இந்த சலுகையானது குறைந்தபட்சம் 3,000 மதிப்புள்ள டிக்கெட் புக்கிங்கிற்கு மட்டுமே பொருந்தும்.
இந்த சலுகை திட்டம் தொடர்பாக இண்டிகோ வெளியிட்டுள்ள செய்தியில், ‘வாடிக்கையாளர்களுக்கு நன்றி! 15 ஆண்டுகள் நிறைவான வருடங்களை கொண்டாடும் முக்கியமான தருணம் இது. நெருக்கடியான காலகட்டங்களிலும், வாடிக்கையாளர்களும், நிறுவனப் பணியாளர்களும் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இண்டிகோ அணி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என நிறுவனம் தெரிவித்துள்ளது.
Also Read | கொரோனா 3வது அலை ஆகஸ்டில் தொடங்குமா; நிபுணர்கள் கூறுவது என்ன..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR