உலகில் வேகமான ஓடும் மனிதன் என்ற பட்டத்தை அமெரிக்காவின் 7 வயது சிறுவன் பெற்றுள்ளான்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகில் மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தங்களுக்கு என்ற தனித்திறமை இருக்கும். சிலர் அந்த திறமையை வெளிப்படுத்துகின்றனர், இன்னும் சிலர் அது வெளிப்படுத்துவதில்லை. ஆனால், நாம் அனைவரின் மனதிலும் ஆங்கில திரைப்படங்களில் வருகின்ற அட்டகாசமான திறைமைகளை உடைய நிறைய கதா நாயகர்கள் மனதில் வைத்திருப்போம். குறிப்பாக, ஹல்க், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், ஐயன் மேன் ஆகிய கதா பத்திரங்கள் அனைத்தும் நீங்கா இடத்தை பெற்றிருக்கும். 


நாம் அனைவரும் இது போன்ற ஒரு சக்தி நமக்கும் கிடைக்காதா என ஏங்கியதும் உண்டு. இது போன்ற தனித்திறைமையை கொண்ட ஒரு சிறுவன் உலகின் வேகமாக ஓடும் சிறவன் என்ற பட்டத்தை பெற்றுள்ளான் அமெரிக்காவின் 7 வயது சிறுவன். 


புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ருடால்ப் பிளேஸ் என்ற சிறுவன் 100 மீட்டர் தூரத்தை 13 புள்ளி 48 விநாடிகளில் ஓடி சாதனை படைத்துள்ளான். முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் படைத்த சாதனையை தானே முறியடித்துள்ளான். ஓட்டப்பந்தயத்தில் மற்றவர்கள் பாதி மைதானத்தை தொடுவதற்குள்ளாக ருடால்ப் குறிப்பிட்ட இலக்கை ஓடி முடித்துவிடுகிறான். 




சிறுவனின் இந்த ஓட்டம் உலகின் வேகமான மனிதன் என்று பெயரெடுத்த உசேன் போல்ட் வேகத்திற்கு இணையானது என்று உடலியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரக்பி விளையாட்டிலும் ருடால்ப் தன்னிகரற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது. இந்த சிறுவனின் சாதனையை அவரது தந்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டும் இன்றி தனது ஏழு ஆண்டு வாழ்கையில் இதுவரையிலும் சுமார் 36 மெடல்களை பெற்றுள்ளான். அதில், 20 மெடல் தங்கம் என்பது  குறிப்பிடத்தக்கது.