கொரோனா வந்தவர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்தை தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில உருவாகி உலகளவில் சுமார் 104 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் சீனா தவிர்த்து இத்தாலி, தென் கொரியா, ஈரான், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1 லட்சத்திற்கு மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது. இந்த கொடூர வைரஸுக்கு இதுவரை 3000-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர். தற்போது வரை இந்தியாவில் 43 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 


என்னதான் மக்களுக்கு அரசு வைரஸ் குறித்து விழிப்புணர்வை கொடுத்து வந்தாலும் அதன் மீது உள்ள பீதி அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கொரோனா வந்தவர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்தை தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரொனாவுக்கு மருந்தைக் கண்டுபிடிக்கும் ஒரு பரிசோதனை மையம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கொரோனாவிற்கான மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்  ஈடுபட்டுள்ள லண்டன் ஆராய்சி நிறுவனம் பரிசோதனை செய்ய ஆட்களைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் 3500 பவுண்ட் வழங்குகிறதாம் அதாவது இந்திய மதிப்பில் ரூ3.38 லட்சம். ஆனால் அவர்கள் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தலில் செலவிட வேண்டியிருக்கும், வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை.


வைட் சேப்பலில் உள்ள குயின் மேரி பயோஎன்டர்பிரைசஸ் புதுமை மையத்தில் ஒரு பிரிவில் தன்னார்வலர்கள் வைக்கப்படுவார்கள். கொரோனா வைரஸின் இரண்டு பொதுவான விகாரங்களான 0C43 மற்றும் 229E ஆகியவற்றால் அவை பாதிக்கப்படும், இது லேசான சுவாச நோயை மட்டுமே ஏற்படுத்தும். இந்த விகாரங்கள் கொடிய COVID-19 க்கு வேறுபட்டவை. இந்த அலகு ஒரு நேரத்தில் 24 பேரை பரிசோதிக்கும் மற்றும் அடுத்த குளிர்காலத்திற்குள் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் என்று நம்புகிறது.


ஒரு காலத்தில் எலியிடம் சோதனை நடத்தி அது வெற்றி கண்ட பின்பே மனிதர்களிடம் மருந்துகளைச் சோதிக்கும் காலம் போய் இன்று மனிதர்களுக்கு நோயை வரவழைத்து பின்பு அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் நிலைக்கு வந்துவிட்டோம்.