புதுடெல்லி: இன்றைக்கு ரயிலில் பயணம் செய்ய நீங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தால், இது கட்டாயம் நீங்கள் படிக்க வேண்டிய செய்தியாகும். அதாவது 268 ரயில்களை இந்திய ரயில்வே இன்று (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், வீட்டை விட்டு பயணிகள் வெளியேறுவதற்கு முன், உங்கள் ரயில் குறித்த முழுமையான தகவல்களை அறிந்துக்கொள்ளுங்கள். ரத்து செய்யப்பட்ட ரயில்களில் பெரும்பாலானவை பயணிகள் ரயில்கள். அதில் சில எக்ஸ்பிரஸ் ரயில்களும், சிறப்பு ரயில்களையும் அடங்கும். பல ரயில்வே மண்டலங்களில் பழுதுபார்க்கும் பணிகள் காரணமாக நாடு முழுவதும் ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியல் ரயில்வே வலைத்தளமான தேசிய ரயில் விசாரணை இணையதளத்தில் (NTES) வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இந்திய ரயில்வே ரத்து செய்த ரயில்கள் பற்றிய தகவல்களும் ரயில் நிலையங்களில் அறிவிப்புகள் மூலம் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்திய ரயில்வேயின் 139 என்ற சேவை எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்வதன் மூலம் ரயில்களின் நிலையை நீங்கள் அறிந்து கொள்ளலாம். ரத்து செய்யப்பட்ட ரயிலின் டிக்கெட்டை திரும்ப ஒப்படைத்து பயணிகள் முழு பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.


எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்பதை அறிந்துக்கொள்ள - கிளிக் செய்யவும்


இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் தினமும் சுமார் 12600 ரயில்களை இயக்குகிறது. நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒவ்வொரு நாளும் சுமார் 23 மில்லியன் மக்கள் அதில் பயணம் செய்கிறார்கள். இந்திய ரயில்வே சார்பாக, வழித்தடங்கள் மற்றும் பிற ரயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, ரயில்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்ப்படுகிறது.