ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் திருமண கோலத்தில் புது மண தம்பதியினர் தங்கள் குடும்பத்தோடு வாக்கு சாவடிக்கு வந்து வாக்களித்தனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் 8 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகளிலும், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகளிலும், பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளிலும், மேற்குவங்காளத்தில் 9 தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகளிலும், இமாச்சலபிரதேசத்தில் 4 தொகுதிகளிலும், சண்டிகர் உள்ளிட்ட 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே மக்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.


ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மணாலி மக்களவை தொகுதியில் இன்று திருமண ஜோடியினர் மணக்கோலத்தில் தங்களது குடும்பத்தினருடன் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். புது மண ஜோடிகள் தங்கள் கழுத்தில் பண மாலையை அணிந்தவாறு வந்து வாக்களித்ததை அங்கிருந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர்.