திருமண வீட்டில் சாப்பிட பெண்ணிற்கு `பில்` அனுப்பிய பெண் வீட்டார்...!
திருமண நிகழ்ச்சியில ஒன்றில் தன் மகனுடன் சென்று கலந்து கொண்டு அங்கு சாப்பிட்ட பெண்ணிற்கு பில் அனுப்பிய பெண் வீட்டார்!
திருமண நிகழ்ச்சியில ஒன்றில் தன் மகனுடன் சென்று கலந்து கொண்டு அங்கு சாப்பிட்ட பெண்ணிற்கு பில் அனுப்பிய பெண் வீட்டார்!
"திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ்வுறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது.
அதுவும், இந்திய திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்று கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில ஒன்றில் தன் மகனுடன் சென்று கலந்து கொண்டு அங்கு சாப்பிட்ட பெண்ணிற்கு பெண் வீட்டார் பில் அனுப்பியுள்ள சம்பவம் விரலாக பரவி வருகிறது.
இதை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "நான் என் 16 வயது மகனுடன் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்றேன். திருமணம் சிறப்பாக முடிந்ததும், உணவுக்கான நேரம் வந்தது. அத்தனை விருந்தினர்களும் உணவிற்காக அழைக்கப்பட்டோம். நானும் என் மகனும் உணவு உண்ண சென்றோம். அங்குப் பெரியவர்கள் குழந்தைகள் என இரு பிரிவாக உணவு பரிமாறப்பட்டது. நானும் எனது மகனும் உணவு உன்னட பின்னர் கிளம்பிவிட்டோம்.
இதையடுத்து, இரண்டு நாள் கழித்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடித்ததில் 'நீங்கள் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தது சந்தோஷம், நீங்கள் உங்கள் மகனுடன் வந்திருந்தீர்கள். எங்கள் திருமண நிகழ்ச்சியில் 18 வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்காகத் தனி உணவு தயார் செய்து வைத்திருந்தோம்.
உங்கள் குழந்தை அதை சாப்பிடாமல் உங்களுடன் சேர்ந்து பெரியவர்களுக்கான உணவையே சாப்பிட்டுள்ளார். இதற்காக கேட்ரிங் செய்தவர்கள் எங்களிடம் சார்ஜ் செய்துவிட்டனர். அதற்கான பில்லை இத்துடன் இணைத்துள்ளோம் அந்த தொகையை எங்களுக்கு அனுப்புமாறு கேட்டு கொள்கிறோம்.' என குறிப்பிட்டிருந்தனர்.
இதை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. நான் திருமண நிகழ்ச்சியில் இருக்கும் போது குழந்தைகளுக்கான தனி உணவு என பார்த்தபோது 12 வயதுக்கு குறைவானவர்களுக்கு என கருதினேன். வயது குறித்த எந்த அறிவிப்பும் அங்கு இல்லை. 18 வயது என்பது இந்த கடிதம் மூலமே எனக்கு தெரிகிறது. மேலும், அங்கிருந்த குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் என் மகன் பெரியவன் அதனால் அவனை என்னுடனேயே சாப்பிட அழைத்தேன். " என புலம்பி தள்ளியிருந்தார். இந்த போஸ்ட் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.