குரு பிரகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிசிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார். அத்துடன் திட்டையில் கோயில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவகிரகங்களில் வியாழனாக அந்தஸ்தினைப் பெற்றார். அதனால் வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒளி படைத்த ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவர் இவர்.


வியாழனுக்கு "குரு" என்றும் "பிரகஸ்பதி" என்றும் சிறப்புப் பெயர்கள் உண்டு. பிரகஸ்பதி என்றாலே, அறிவில் மிகச்சிறந்தவன் என்ற அர்த்தம் தொனிக்கும். 


குரு என்ற சொல்லுக்கு அஞ்ஞாநத்தைப் போக்குகிறவர் என்ற பொருள் உண்டு. ஜோதிட சாஸ்த்திரத்தில் "குரு" என்றால் வியாழ பகவானையே குறிக்கும்.