ஆற்றில் எதிர்பாராத விதமாக விழுந்த பெண்ணை மீட்க பிரிட்டிஷ் தூதர் ஆற்றில் குதித்து காப்பாற்றிய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவின் ஜாங்ஷன் நகராட்சி தூதுவராக பணியாற்றி வருபவர் 61 வயதான ஸ்டீபன் எலிசன். இவர் ஜாங்ஷன் கிராமத்திற்கு அருகே சுற்றுலா தளத்தை பார்வையிட்டிருந்த போது 24 வயதுடைய இளம் பெண் ஒருவர் அங்கிருந்த ஆற்றுக்குள் தடுமாறி விழுந்தார். அலறல் சத்தத்தை கேட்ட ஸ்டீபன் எலிசன் உடனே உதவி செய்ய ஓடினார். ஆற்றில் தத்தளித்த பெண் சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்து ஆற்றில் மெல்ல மெல்ல மூழ்கினார்.


சற்றும் எதிர்பாராத நேரத்தில் கால்களில் இருந்து ஷீக்களை எரிந்து விட்டு ஆற்றில் குறித்த எலிசன், அப்பெண்ணை காப்பாற்றினார். இதை சுற்றுலா தளத்தில் இருந்தவர்கள் வீடியோவாக படம் பிடித்தனர். தற்போது அந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி மக்களின் பாராட்டைப்பெற்று வருகிறது. தற்போதுவரை இந்த வீடியோ 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது.


ALSO READ | See Pic's: ஆழ்கடலில் அரைகுறை ஆடையில் கணவருடன் குஜாலா இருக்கும் காஜல்..!



இது குறித்து அவர் கூறுகையில்., சுயநினைவு இழந்த நிலையில் ஆற்றில் கிடந்த அவரின் மூச்சு விடும் செயல்முறையும் நின்று போனது. அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தவுடன் மீண்டும் அவர் சுவாசிக்க ஆரம்பித்துவிட்டார் என்றார். இது குறித்து சீனாவில் உள்ள இங்கிலாந்து தூதகரம், தூதரின் இந்த துரிதமான செயல் பெருமிதம் கொள்ளச் செய்வதாக கூறியுள்ளது.