See Pic's: ஆழ்கடலில் அரைகுறை ஆடையில் கணவருடன் குஜாலா இருக்கும் காஜல்..!

மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றிருக்கும் காஜல் அகர்வால் கணவருடன் கடலுக்குள் நீச்சலடிக்கும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்..!

Last Updated : Nov 17, 2020, 11:53 AM IST
See Pic's: ஆழ்கடலில் அரைகுறை ஆடையில் கணவருடன் குஜாலா இருக்கும் காஜல்..! title=

மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றிருக்கும் காஜல் அகர்வால் கணவருடன் கடலுக்குள் நீச்சலடிக்கும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்..!

நடிகை காஜல் அகர்வால் (Kajal Aggarwal) பேரரசு இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான "பழனி" திரைப்படத்தின் மூலம் தமிழில் திரையுலகுக்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர், பொம்மலாட்டம், பழனி, மோதிவிளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மெர்சல், ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, விவேகம் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தற்போது, கமல்ஹாசனின் 'இந்தியன் 2'-வில் நடித்து வருகிறார். இந்தி, தமிழ், தெலுங்கு என மும்மொழிகளில் நடித்து வந்தாலும் காஜல் அகர்வாலை முன்னணி நடிகையாக்கியது ராஜமெளலி இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான 'மஹதீரா' தான். இப்படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதையடுத்து, கடந்த அக்டோபர் 30-ம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கவுதம் கிச்லு - காஜல் அகர்வால் திருமணம் நடைபெற்றது. கொரோனா காலம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் காஜல் அகர்வால் - கவுதம் கிச்லு ஜோடி ஹனிமூன் கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார் காஜல்.

ALSO READ | கடற்கரை மணலில் நிர்வாணமாக படுத்தபடி போஸ் கொடுத்த பிக்பாஸ் புகழ் ஜூலி!!

காஜல் அகர்வால் பிகினி உடையில் கடல் கன்னியைப் போன்று ஆழ்கடலில் அசராமல் தனது கணவருடன் ஜாலியாக நீந்தி குளித்துக்கொண்டு வெளியிட்டுள்ள இந்த பிகினி புகைப்படங்கள் ரசிகர்களை வாய் பிளக்க வைத்ததோடு தொடர்ந்து வைரலாகி வருகிறது. காஜல் அகர்வால் - கவுதம் கிச்லு ஜோடியின் ஹனிமூன் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் கவனம் பெற்று வருகின்றன.

Trending News