BSNL தனது Bharat FIber திட்டங்களை புதுப்பித்து, அவற்றை இந்தியாவில் ஒன்பது வட்டங்களில் செயல்முறைப்படுத்தியுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் வட்டத்தைத் தவிர இந்தியா முழுவதும் BSNL இந்த புதுப்பிக்கப்பட்ட திட்டங்களை கிடைக்கச் செய்ய வாய்ப்புள்ளது. BSNL 20 ஆண்டுகளை பூர்த்திசெய்ததன் அடையாளமாக இந்த திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டன. மேலும் அக்டோபரை மாதத்தை BSNL வாடிக்கையாளர் மகிழ்ச்சி மாதமாக கொண்டாடி வருகிறது. புதுப்பிக்கப்பட்ட திட்டங்களைப் பற்றி பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதுள்ள பாரத் ஃபைபர் புதுப்பிக்கப்பட்ட திட்டங்கள் சண்டிகர், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப், ராஜஸ்தான், கிழக்கு உத்தரபிரதேசம், மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் BSNL சர்கிள்களில் செயல்முறையில் உள்ளது. இந்த வளர்ச்சியை முதலில் டெலிகாம் டாக் குறிப்பிட்டது.


ALSO READ: Flipkart Big Diwali Sale 2020: நாளை முதல் ஆரம்பம்; ஆபர்கள் என்ன? இதோ லிஸ்ட்!


100GB CUL: BSNL 100GB CUL திட்டத்தை மாற்றியமைத்துள்ளது. மாதத்திற்கு ரூ .499 க்கு 100 GB வரை, இந்த திட்டத்தில் 50 Mbps speed கிடைக்கிறது. 100GB ஆன பிறகு, BSNL வேகத்தை 2 Mbps-ஆக குறைக்கிறது. 100GB CUL திட்டம் முன்னர் 20 Mbps speed-ஐ மட்டுமே கொடுத்தது.


3GB CUL மாதாந்திர திட்டம்: 3GB வரம்பை அடையும் வரை 100 Mbps speed-ஐ அளிக்க இந்த திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. 3GB வரம்பை அடைந்த பிறகு, வேகம் 2 Mbps ஆக குறைக்கப்படுகிறது. இந்த திட்டம் மாதத்திற்கு ரூ .519 க்கு வருகிறது.


500GB CUL: 500GB வரம்பை அடையும் வரை இந்த திட்டம் 100Mbps speed-ஐ வழங்குகிறது. தரவு வரம்பை அடைந்த பிறகு, வேகம் 5Mbps- ஆக குறைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ .777 ஆகும்.


600GB CUL திட்டம்: 600GB வரம்பை அடையும் வரை இந்த திட்டம் 100 Mbps speed-ஐ வழங்குகிறது. தரவு வரம்பை அடைந்த பிறகு, வேகம் 10 Mbps-ஆக குறைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ .849 ஆகும்.


750GB மாதாந்திர திட்டம்: இது ஒரு உயர்மட்ட திட்டமாகும். இதில் 13.3 TB-ஐ (3300 GB) அடையும் வரை 200 Mbps speed கிடைக்கும். வரம்பை அடைந்ததும், வேகம் 15 Mbps ஆக குறைக்கப்படுகிறது. இந்த திட்டம் மாதத்திற்கு ரூ .1299 ஆகும் என்ற விலையில் கிடைக்கிறது.


BSNL-ன் புதுப்பிக்கப்பட்ட FTTH திட்டங்கள்: BSNL தனது Fiber-to-the-Home திட்டங்களையும் புதுப்பித்தது. ரூ .1499 க்கு மேல் விலை கொண்ட FTTH திட்டங்களுக்கு, BSNL 4 TB (4000 GB) வரை 200 Mbps speed-ஐ அளிக்கிறது. வரம்பை அடைந்த பிறகு, வேகம் 20 Mbps ஆக குறைக்கப்படுகிறது.


ALSO READ: வெறும் 5000 ரூபாயில் இந்த தொழிலை தொடங்கி, மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கலாம்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR