BSNL தனது வாடிக்கையாளர்களுக்காக IPTV 1499 என்கிற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது இந்நிறுவனம். இந்நிலையில், BSNL தனது வாடிக்கையாளர்களுக்காக IPTV 1499 என்கிற புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 


குறிப்பாக பிஎஸ்எஸ்எல் நிறுவனம் அதன் சென்னை ட்விட்டர் கணக்கு வழியாக இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, அதன்படி புதிய PV-1499 திட்டமானது செப்டம்பர் 1, 2020 முதல் பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. BSNL நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய IPTV-1499 திட்டம் ஆனது பயனர்களுக்கு மொத்தம் 24GB அளவிலான FUP டேட்டாவுடன் வருகிறது, மேலும் இதன் நன்மைகளை தவிரித்து, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | JIO-வை மிஞ்சும் அளவிற்கு BSNL வெளியிட்ட வொர்க் ப்ரம் ஹோம் திட்டம்!!


மேலும், இந்த திட்டத்தின் குரல் அழைப்பு நன்மையானது ஒவ்வொரு நாளும் 250 நிமிடங்களுக்கு என்கிற FUP வரம்பைக் கொண்டுள்ளது. அதன்பிறகு, வாடிக்கையாளர் குரல் அழைப்புகளைச் செய்வதற்கு நிலையான கட்டணத்தின் கீழ் செலவீனங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 100 SMS இலவசமாக வழங்கப்படுகிறது.


மேலும் இந்த திட்டம் ஒரு விளம்பர சலுகையாக அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால், இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் 90 நாட்களுக்குள் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கூடுதல் செல்லுபடியை பெறுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. சுருக்கமாக இந்த பி.வி-1499-திட்டம் ஆனது 365 நாட்கள் என்ற செல்லுபடியை கொண்டுள்ளது, அதுவே விளம்பர சலுகையுடன் இந்த திட்டத்தின் அசல் செல்லுபடியாகும் தன்மை 30நாட்கள் நீட்டிக்கப்படும். எனவே திட்டத்தின் மொத்த செல்லுபடியாகும் தன்மை 395 நாட்களாக மாறும் என்று எதிர்பார்க்க்படுகிறது.