பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பு வகையான ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், BSNL Cinema Plus என்ற புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில், பயனர்கள் ஒரே ஒரு சந்தா மூலம் SonyLIV மற்றும் Voot Select உள்ளிட்ட பல OTT தளங்களை கண்டு அனுபவிக்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

BSNL மூலம் தொகுக்கப்பட்ட இந்த சேவையின் தொகை மாதத்திற்கு ரூ. 199 ஆகும். இருப்பினும், தற்போது இது மாதத்திற்கு ரூ .129 என்ற அறிமுக விலையில் வழங்கப்படுகிறது. இந்த அறிமுக விலை முதல் 3 மாதங்களுக்கானது. BSNL Cinema Plus சேவையில் 300 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் உள்ளன என்று BSNL கூறுகிறது.


YuppTV உடன் கூட்டு


BGR அறிக்கையின்படி, BSNL, Yupp TV உடன் இணைந்து BSNL Cinema Plus சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையைப் பெறும் BSNL சந்தாதாரர்கள் SonyLIV Special, VootSelect, YuppTV Premium மற்றும் Zee 5 Premium போன்ற OTT தளங்களுக்கான அணுகலைப் பெறுவார்கள். இந்த சேவை YuppTV ஸ்கோப் மூலம் அளிக்கப்படுகிறது. இது ஒரே சந்தாவில் பல OTT தளங்களுக்கு அணுகலை வழங்குகிறது.


ALSO READ: Jio, Airtel, Vi நெட்வொர்க்குகளின் மிக குறைந்த விலை டேட்டா பிளான்களின் முழு விவரம்!


மொபைலுடன் டிவி நிகழ்ச்சிகளையும் காணலாம்


BSNL Cinema Plus சேவைக்கு சப்ஸ்க்ரைப் செய்யும் BSNL பயனர்கள் தங்கள் கணினி, மொபைல் (Mobile) மற்றும் ஸ்மார்ட் டிவியில் வலைத்தளங்களில் உள்ள நிகழ்ச்சிகளைக் காணலாம். இது தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் உள்ளடக்க திரட்டல் போன்ற அம்சங்களையும் வழங்குகிறது.


திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகள்


திரைப்படங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள், விளையாட்டு, இசை மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என பலவகையான நிகழ்ச்சிகள் BSNL Cinema Plus சேவையில் காணக்கிடைக்கும். இதில், Zee 5 மற்றும் Voot போன்ற தளங்கள் மூலம் நீங்கள் நேரலை தொலைக்காட்சி (LiveTV) மற்றும் பிற நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிக்கலாம்.


BSNL Cinema Plus சேவைக்கு எவ்வாறு சப்ஸ்க்ரைப் செய்வது?


BSNL சந்தாதாரர்கள் BSNL சினிமா பிளஸ் சேவையை நிறுவனத்தின் வலைத்தளத்திலிருந்து பெறலாம். இதற்கு நீங்கள் வலைத்தளத்தில் சைன் இன் செய்து பதிவு செய்ய வேண்டும். இதற்கு BSNL தொலைபேசி எண், தொலைத் தொடர்பு வட்டம், மின்னஞ்சல் ஐடி மற்றும் முழு பெயர் போன்ற தகவல்கள் கொடுக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்ததும், செயலியின் மூலம் இந்த சேவையை நீங்கள் பெறலாம். அண்ட்ராய்டு (Android), ஐபோன், ஆண்ட்ராய்டு டிவி மற்றும் ஃபயர் டிவி போன்ற சாதனங்களுக்கு இந்த செயலி கிடைக்கிறது.


ALSO READ: BSNL இன் அற்புதமான திட்டம், Unlimited Data கிடைக்கும்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR