பகவான் புத்தர் அவதாரம் செய்தது, ஞானம் பெற்றது, பரிநிர்வாணம் அடைந்தது என அனைத்து முக்கிய நிகழ்வுகளும் வைகாசி மாத பவுர்ணமி நாளன்று நடைபெற்றது. எனவே பௌத்தர்களுக்கு புத்தபூர்ணிமா மிகவும் முக்கியமானது. 2021ஆம் ஆண்டின் புத்த பூர்ணிமா உலகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சித்தார்த்த கௌதமர் (Siddhartha Gautama) இன்றைய நேபாளத்தில் இருக்கும் லும்பினி என்ற ஊரில் பிறந்தவர். இந்தியாவின் புத்தகயாவில் தவம் புரிந்து ஞானம் அடைந்த நாள் இன்று. புத்தர் உலகில் இருந்து பரிநிர்வாணம் அடைந்த நாள் வைகாசி மாத பெளர்ணமி தினமான இன்று... 


இமயமலை அடிவாரத்திலுள்ள ‘கபிலவஸ்து’வில் அரசக் குடும்பத்தில் கி.மு.563ஆம் ஆண்டு புத்தர் பிறந்தார் சித்தார்த்த கெளதமர். இளவரசராகப் பிறந்தாலும், சிறுவனான சித்தார்த்தனை சொகுசு வாழ்க்கை ஈர்க்கவில்லை. பிணி, மூப்பு, சாக்காடு போன்றவை அவர மனதில் கவலைகளை ஏற்படுத்தின.


Also Read | இந்து மதத்தின் மாபெரும் சிற்பி ஆதி சங்கரரின் ஜெயந்தி இன்று


பால்ய பருவத்தில் இருந்தே உலகின் ஏற்றத்தாழ்வுகளையும், துயரங்களையும் பார்த்து மனம் வேதனையடைந்த இளவரசர் சித்தார்த்தன், குடும்பம், அரசு அதிகாரம் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு காவியுடை தரித்து வீட்டை விட்டு வெளியேறினார். தேடலின் முடிவு சித்தார்த்த கெளதமனை, புத்தராக்கியது.


பௌத்தம் அல்லது பௌத்த சமயம் (Buddhism) என்பது கௌதம புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமயமும், தத்துவமுமாகும்.  


பௌத்த சமயத்தில் முக்கியமான இரண்டு பிரிவுகள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன: தேரவாத பௌத்தம் மற்றும் மகாயான பௌத்தம் இலங்கை மற்றும் தென்கிழக்காசியாவில் கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகின்றது தேரவாதம் என்ற பெளத்த மதப் பிரிவு. 


Also Read | Vaikasi Visakam: சிவகுமரன் அறுமுகன் முருகனின் பிறந்தநாள் வைகாசி விசாகம் 


சீனா, கொரியா, ஜப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான் போன்ற கிழக்காசிய நாடுகளில் மகாயானம் பின்பற்றப்படுகிறது. இந்த இரண்டு பிரிவுகளையும் தவிர்த்து வச்சிரயான பௌத்தம் மூன்றாவது பிரிவு, திபெத்து, மற்றும் மங்கோலியாவில் பின்பற்றப்படுகிறது.


உலகில் தற்போது 350 மில்லியன் முதல் 1.6 பில்லியன் பௌத்தர்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலகில் மிக வேகமாகப் பரவி வரும் சமயங்களில் பௌத்தமும் ஒன்று என்பதால் இந்த புத்தபூர்ணிமா உலகம் முழுவதும் விசேஷமாக கொண்டாடப்படும் ஒரு நாள்.  


பெளத்த மதம் ஏன் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது? பெளத்த மதம் கடவுள் இருப்பதை ஏற்கவில்லை. கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது என்று கூறும் பெளத்தம், அதை மீறிய சக்தி ஒன்று இருப்பதை மறுக்கின்றது.    


Also Read | ஸ்ரீசடாரி எனும் நம்மாழ்வார் மூலம் ஆலயங்களில் பக்தர்களுக்கு அருள் புரியும் விஷ்ணு


பெளத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகைப் பிறவிகள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில் கர்ம விதிகளைப் புரியக் கூடியவர்கள், ஆனால் அவர்களும் கர்ம விதிகளுக்குக் கட்டுபட்டவர்களே. இதுதான் புத்த மதத்தின் நிலைப்பாடு.


புத்தர் ஞானமடைந்தவர், விடுதலை பெற்ற மனிதர் என்பதுதான் உண்மை. எனவே, புத்தரை கடவுளாக வழிபடக்கூடாது, புத்தருக்கு மரியாதை செலுத்த வேண்டும், அவர் வணங்கப்படக்கூடாது என்று பெளத்த மதம் வலியுறுத்துகிறது.  


அனைத்தையும் உருவாக்கும், நிர்வாகிக்கும், அழிக்கும் குணங்களைக் கொண்ட கடவுள் என்ற ஒன்று உண்டு என்பதைப் புத்தர் மறுத்தார். இந்தியாவின் சாபக்கேடுகளுள் ஒன்றான சாதி, வருணாசிரம முறை என ஏற்றத் தாழ்வுகளை வென்ற மதமாக பௌத்தம் உருக்கொண்டது.


Also Read | இன்றைய ராசிபலன், 26 மே 2021: எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும்


இந்தியாவில் மட்டும் தான் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறதா? உலகம் முழுவதும் ஏதாவது ஒரு விதத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளே, பெளத்த மதத்தை பலரும் பரவலாக ஏற்றுக் கொள்ள முக்கிய காரணமானது. 


இந்தியாவில் சாதி, மத வேறுபாடுகளை சிறு வயதில் இருந்தே அனுபவித்த அண்ணல் அம்பேத்கர், தனது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளில் பௌத்த மதத்தைத் தழுவினார். இந்திய விடுதலைக்குப் பின்னர் அவர் சட்ட அமைச்சராக இருந்தபோது, புத்த பூர்ணிமா தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.


Also | Ship fire off Colombo: சரக்குக் கப்பலின் தீயை அணைக்க 2 கப்பல்களை அனுப்பியது ICG


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR