மூத்த குடிமக்களுக்கான அசத்தல் சேமிப்பு திட்டம்: வட்டியிலேயே ஜாக்பாட் வருமானம்
SCSS: முதியவர்களுக்கான ஒரு பாதுகாப்பான, சிறந்த முதலீட்டு திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
தபால் அலுவலகத் திட்டம்: நீங்கள் தபால் அலுவலகத்தில் பணத்தை முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. குறிப்பாக முதியவர்களுக்கான அட்டகாசமான செய்தி உள்ளது. இப்போது வயதான காலத்தில் வயது முதிர்ந்தவர்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் சரியான முறையில் பணத்தை முதலீடு செய்து, அஞ்சல் அலுவலகத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டால், முதுமையை இனிமையாக கழிக்கலாம்.
இந்த முதலீட்டில் உங்களுக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். முதியவர்களுக்கான ஒரு பாதுகாப்பான, சிறந்த முதலீட்டு திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம். இதில் ரூ. 5 லட்சத்தை முதலீடு செய்து, வட்டியிலிருந்து மட்டும் ரூ.2 லட்சத்தை பெற முடியும். இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்ன? இதில் எப்படி முதலீடு செய்வது? இவை அனைத்தையும் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.
இப்போது 8.2 சதவீத வட்டி கிடைக்கிறது
அஞ்சல் அலுவலக திட்டத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் (SCSS) கீழ், வட்டியில் இருந்து மட்டும் ரூ. 2 லட்சத்தை பெறலாம். இது மத்திய அரசின் சிறந்த திட்டமாகும். இதில் முதலீட்டாளர்கள் மொத்தப் பணத்தை டெபாசிட் செய்தால் அபரிமிதமான லாபத்தைப் பெறுவார்கள். வங்கிகளின் பிக்சட் டெபாசிட்டில் கிடைப்பதை விட இதில் அதிக பலன் கிடைக்கும். இந்த நேரத்தில், சேமிப்பு திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டியின் பலன் கிடைக்கும்.
2 லட்சம் வட்டி யாருக்கு கிடைக்கும்
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எஸ்சிஎஸ்எஸ் -இல் முதலீடு செய்யலாம். இத்துடன் விஆர்எஸ் எடுத்தவர்களும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். மொத்தமாக ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்தால், ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.10,250 வட்டியாகக் கிடைக்கும். இது தவிர, ஆண்டு அடிப்படையில் ரூ.2,05,000 வட்டி கிடைக்கும். இதற்கான கணக்கீட்டை இங்கே காணாலாம்.
மேலும் படிக்க | பெண்களுக்கான அசத்தல் சேமிப்பு திட்டங்கள்: வரி விலக்குடன் பல நன்மைகள்
2 லட்சம் ரூபாய் வட்டி பெறுவது எப்படி?
- மொத்த வைப்புத் தொகை - ரூ 5 லட்சம்
- வைப்பு காலம் - 5 ஆண்டுகள்
- வட்டி விகிதம் - 8.2 சதவீதம்
- முதிர்வுத் தொகை - ரூ 7,05,000
- வட்டி மூலம் வரும் தொகை - ரூ 2,05,000
- காலாண்டு வருமானம் - ரூ 10,250
இந்த கணக்கை எப்படி திறப்பது?
இந்த கணக்கை நீங்கள் எந்த தபால் அலுவலகத்திலும், அரசு வங்கியிலும் அல்லது தனியார் வங்கியிலும் தொடங்கலாம். இந்தக் கணக்கைத் திறக்க நீங்கள் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும். இதனுடன், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் வைத்திருக்க வேண்டும். இது தவிர, அடையாளச் சான்றிதழின் நகல் மற்றும் பிற KYC ஆவணங்கள் படிவத்துடன் இதை சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதில் வட்டிப் பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் வந்து சேரும்.
தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்
இந்தியா போஸ்ட், முதலீட்டாளர்களுக்கு பல டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. இவை பொதுவாக தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. தற்போது, அரசு 9 தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. இந்த ஒன்பது சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC), தபால் அலுவலக நேர வைப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஆகியவை அடங்கும். இந்த திட்டங்களில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதங்களை அரசாங்கம் மாற்றிக்கொண்டே இருக்கிறது.
மேலும் படிக்க | மத்திய அரசின் அசத்தல் திட்டம்... மாதம் ₹200 முதலீட்டில் ₹72,000 பென்ஷன் பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ