பெண்களுக்கான அசத்தல் சேமிப்பு திட்டங்கள்: வரி விலக்குடன் பல நன்மைகள்

Saving Schemes For Women: அரசு திட்டங்களில், பெண்களுக்கு நல்ல வட்டி விகிதத்துடன் வரி விலக்கு பலன் அளிக்கப்படுகிறது

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 8, 2023, 02:35 PM IST
  • செல்வமகள் சேமிப்பு திட்டம்.
  • மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம்.
  • பொது வருங்கால வைப்பு நிதி.
பெண்களுக்கான அசத்தல் சேமிப்பு திட்டங்கள்: வரி விலக்குடன் பல நன்மைகள் title=

பெண்களுக்கான சேமிப்பு திட்டங்கள்: அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பெண்களுக்கான அரசு திட்டங்களில், பெண்களுக்கு நல்ல வட்டி விகிதத்துடன் வரி விலக்கு பலன் அளிக்கப்படுகிறது. தேசிய சேமிப்பு மாதாந்திர வருமானத் திட்டம் (National Saving Monthly Income Scheme), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Saving Scheme), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மற்றும் மகிளா சம்மான் பச்சத் யோஜனா போன்ற பல திட்டங்கள் இதில் அடங்கும்.

செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY)

நீங்கள் ஒரு தாயாகவும், உங்கள் மகளின் வயது 10 அல்லது அதற்கும் குறைவாகவும் இருந்தால், நீங்கள் சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் மகளுக்கு 21 வயது முடியும் வரை அவரது பெயரில் ஆண்டுதோறும் முதலீடு செய்து அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றலாம். இந்த திட்டத்தில், அதிக வட்டி விகிதத்துடன், பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.

இந்த வழியில் நீங்கள் பெரிய தொகையை சேர்க்கலாம்

இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகள் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். இதன் முதிர்வு காலம் (மெஸ்யூரிட்டி பீரியட்)  21 ஆண்டுகள் ஆகும். இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்வதன் மூலம், ஒரு வருடத்தில் மொத்தம் ரூ.60,000 முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.9 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் 15 மற்றும் 21 ஆண்டுகளுக்கு இடையில் எந்தப் பணத்தையும் முதலீடு செய்ய வேண்டியதில்லை. ஆனால் உங்கள் வைப்புத்தொகையில் 8 சதவிகிதம் வட்டி தொடர்ந்து சேர்க்கப்படும்.

மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம்

மகிளா சம்மான் பச்சத் பத்ரா யோஜனா 2023 இல் பெண்களுக்காகவே பிரத்யேகமாக தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டுப் பெண்கள், தபால் நிலையத்தில் சேமிப்புக் கணக்கு மூலம் சுமார் 1 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டத்தின் நன்மை என்னவென்றால், பெண்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் இரண்டு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு வட்டியுடன் சுமார் 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அடிச்சது இரட்டை ஜாக்பாட்!! டிஏ உடன் இதுவும் ஏறும்

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)

பிபிஎஃப் திட்டத்தில், ஒரு நிதியாண்டில் பெண்கள் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் சுமார் 15 ஆண்டுகள் ஆகும். உங்கள் வசதிக்கேற்ப, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் இந்த திட்டத்தை நீட்டித்துக்கொள்ளலாம். இத்திட்டத்தில் ஆண்டுதோறும் 7.1 சதவீத வட்டி வீதம் அரசால் வழங்கப்படுகிறது. இதனுடன், வருமான வரியின் பிரிவு-10ன் கீழ் வரியில்லா வட்டியையும் பெறுவீர்கள். 80C இன் கீழ் வரிச் சலுகையின் பலனும் இந்த முதலீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS)

பெண்கள் தங்கள் ஓய்வூதியத் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நிதி வல்லுநர்கள் வலியுறுத்துகிறார்கள். ஏனெனில் அது 60 வயதுக்கு பிறகு அவர்களது வாழ்க்கைக்கு நிதிப் பாதுகாப்பாய் அமைகிறது. தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) மற்றும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) போன்ற பல திட்டங்கள் உங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குகின்றன. இதனுடன், இந்த திட்டங்கள் ஓய்வூதிய கார்பஸ் ஏற்பாடு செய்வதற்கும் உங்களுக்கு பெரிதும் உதவுகின்றன.

மேலும் படிக்க | இனி இந்த இடங்களில் ட்ராலி பேக் பயன்படுத்தினால் அபராதம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News