அன்பு மற்றும் காதலுக்கு அதிபதி கிரகமான சுக்கிரன் மார்ச் 31, 2022 அன்று கும்ப ராசியில் பிரவேசிக்க உள்ளார். டிசம்பர் 8 முதல், சுக்கிரன் மகர ராசியில் இருந்தார். தற்போது அவர் கும்ப ராசியில் பிரவேசித்து ஏப்ரல் 27-ஆம் தேதி வரை அதில் இருப்பார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரனின் ராசி மாற்றத்தால், அனைத்து ராசி-களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். நம் உறவுகள், நிதி, படைப்பாற்றல் மற்றும் மகிழ்ச்சி என அனைத்து அம்சங்களிலும் இதன் தாக்கம் இருக்கும். சுக்ரினின் ராசி மாற்றம் பொதுவாக ஆக்கப்பூர்வமான விளைவுகளையே ஏற்படுத்தும். இது நம்மை சுதந்திர மனப்பான்மை கொண்டவர்களாகவும், திறந்த மனதுடன் செயல்படுபவர்களாக உணரச் செய்யும். 


இந்த காலகட்டத்தில் பொதுவாக மக்களின் காதல், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், சில குறிப்பிட்ட ராசிகளில் இதன் ஆக்கப்பூர்வமான விளைவுகள் அதிகமாக இருக்கும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேஷம்: வாழ்க்கையின் பல துறைகளைச் சேர்ந்தவர்களைச் சந்திக்க இது மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு சிறந்த நேரமாக இருக்கும். குறிப்பாக நீங்கள் ஒரு நெருக்கமான உறவைத் தேடுகிறீர்களானால், அந்த உறவு தற்போது அமைய அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த காலத்தில் உங்கள் சமூக வட்டத்தை விரிவுபடுத்தி புதிய நபர்களைச் சந்திப்பீர்கள். 


இந்த காலத்தில் நீங்கள் வழக்கத்தை விட அதிக புத்திசாலித்தனத்துடனும் வசீகரத்துடனும் இருந்தால், அது உங்களுக்கு பல நன்மைகளை ஏற்படுத்திக்கொடுக்கும். சுக்கிரன் மாற்றம் நல்ல பலனைத் தரும். சுக்ரனின் மாற்றத்தின் போது நிதி நிலை மேம்படும். பணியில் இருப்பவர்கள் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல செயல்திறனைக் காணலாம். மேலும், பணியிடத்தில் பாராட்டுகள் குவியும். வெளிநாட்டிலிருந்து அதிகப்படியான பண வரவை எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும்.


மேலும் படிக்க | குரு உதயம், இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இன்று முதல் பிரகாசிக்கும் 


ரிஷபம்:  இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்கள் பலவித முயற்சிகளை எடுத்துப்பார்க்கலாம். இவற்றில் வெற்றி அடைவதற்கான நல்ல சாத்தியக்கூறுகள் உள்ளன. சுக்கிரனின் ராசி மாற்றம் சுப பலன்களைத் தரும். முன்பு செய்த முதலீடு நல்ல பலனைத் தரும். நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பல வாய்ப்புகளை இந்த காலத்தில் பெறுவீர்கள். 


அரசு வேலையில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். சுக்கிரனின் இந்த மாற்றம் ரிஷப ராசிக்கார்ரகளின் காதல் வாழ்க்கைக்கு நல்லதாக இருக்கும். பணியிடத்தில், சக ஊழியர்களுடன் கவனமாக நடந்துகொள்ளுங்கள். உங்கள் பணி பாராட்டப்படும். அதிகாரிகளை மகிழ்விப்பீர்கள்.


துலாம்: சுக்கிரனின் ராசி மாற்றம் துலா ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக இருக்கச்செய்யும். திருமண வாழ்விலும் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை கழிப்பீர்கள். நீங்கள் இதுவரை செய்யாத புதியவற்றைக் கற்றுக்கொள்ள முயற்சிக்கவும். பொருளாதாரம் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். 


நீங்கள் ஒரு ஆர்வமுள்ள படைப்பாளி. உங்கள் கற்பனைக்கு எல்லையே இல்லை என்பதால், சாத்தியங்கள் உங்களுக்கு முடிவற்றவை. கடந்த காலத்தை விடுங்கள், எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.


தனுசு: கடந்த காலங்களில் நீங்கள் ஏதாவது விஷயத்தில் துன்புறுத்தப்பட்டிருந்தால், புதிதாக ஏதாவது முயற்சி செய்யத் தயங்குவதும், பயப்படுவதும் இயல்பானதே. நீங்கள் செல்லும் பாதையை கவனமாக கண்காணிக்க வேண்டிய நேரம் இது. எனினும், உங்களுக்கு இப்போது நல்ல நேரம். சுக்கிரனின் சஞ்சாரம் சுப பலன்களைத் தரும். சுக்கிரனின் ராசி மாற்ற காலத்தில் பணம் ஈட்டும் முயற்சிகள் வெற்றியடையும். 


நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கின் முடிவும் உங்களுக்கு சாதகமாக வரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. கௌரவம் அதிகரிக்கும். இது தவிர, வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் அன்பு உங்களுக்கு தேவையான உறுதியை அளிக்கும். 


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணிகள் துரிதமாக நடைபெறும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR