குரு உதயம், இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இன்று முதல் பிரகாசிக்கும்

ஜோதிடத்தின்படி, குரு பகவான் பிப்ரவரி 24 அன்று அஸ்தமனமானார். தற்போது 26 பிப்ரவரி அதாவது இன்று அவர் மீண்டும் உதயமாகிறார். வியாழனின் உதயம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 26, 2022, 10:54 AM IST
  • இந்த நேரம் வியாபாரிகளுக்கும் சாதகமாக இருக்கும்.
  • வியாபாரத்தில் பண ஆதாயம் உண்டாகும்.
  • முன்னேற்ற பாதைகள் திறக்கப்படும்.
குரு உதயம், இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இன்று முதல் பிரகாசிக்கும் title=

புதுடெல்லி: ஜோதிடத்தின் படி, ஒன்பது கிரகங்களில் தேவகுரு வியாழன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் சுப ஸ்தானத்தில் இருந்தால், அவர்களது திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  பொதுவாக குரு பகவான் அறிவு, கல்வி, மதம், குழந்தைகள், மூத்த சகோதரர் போன்றவற்றுக்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறார். 

குரு பகவான் பிப்ரவரி 24 அன்று அஸ்தமனமானார். மார்ச் 26 , அதாவது நாளை அவர் மீண்டும் உதயமாகிறார். வியாழன் கிரகத்தின் உதயம் மாலை 06.38 மணிக்கு நிகழும். ஒரு கிரகம் அஸ்தமனமானால், அதன் பலன் குறையத் தொடங்குகிறது. வியாழன் கிரகத்தின் அஸ்தமனம் 12 ராசிகளையும் பாதிக்கிறது. ஒரு கிரகம் உதயமாகும் போது, ​​மக்களின் தலைவிதி மாறத் தொடங்கும். அதன்படி அந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | ஏப்ரலில் கிரகங்களின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் உதயத்தால் லாபம் உண்டாகும். இதனுடன் பொருளாதாரப் பக்கமும் வலுவாக இருக்கும். வியாபாரத்தில் பணவரவு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் மூத்த சகோதர சகோதரிகளால் பணப் பலன்கள் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். இது தவிர வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடும் வாய்ப்பு அமையும்.

மிதுனம்: வியாழனின் உதயம் வேலை மற்றும் வியாபாரத்திற்கு மிகவும் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் மரியாதை பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில், மனைவியுடன் உறவு இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள்.

துலாம்: குருவின் உதயத்தால் வேலையில் வெற்றி உண்டாகும். இதனுடன், திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும். தினசரி வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் நீங்கள் செய்யும் பணி பாராட்டப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் உதயம் உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் வீட்டில் நடக்கப்போகிறது. இந்த காலத்தில் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். லாபம் காண பல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News