8 ஆவது ஊதியக் குழு, சமீபத்திய புதுப்பிப்பு: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியராக இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும். இந்த நேரத்தில் மத்திய அரசு, ஊழியர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூலையில் அகவிலைப்படி அதிகரிப்பு குறித்த குறிப்பை வெளியிட்டதோடு, அரசாங்கம் ஊழியர்களுக்கு ஒரு புதிய புதுப்பிப்பையும் வழங்கியுள்ளது. 8 ஆவது ஊதியக்குழு தொடர்பாக மத்திய அரசு புதிதாக ஒரு விஷயத்தை கூறியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் அனைத்து ஊழியர்களும் அதிக சம்பள உயர்வை தரக்கூடிய 8 ஆவது ஊதியக் குழுவுக்காக காத்திருக்கிறார்கள். அதே சமயம் இது குறித்து அரசு தெளிவாக இன்னும் எதுவும் கூறவில்லை. ஆனால் அடுத்த ஊதியக்கமிஷன் அமைக்கப்படாது என்றும் கூறுவதற்கில்லை. 2024 ஆம் ஆண்டு நாட்டில் பொது தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதை கருத்தில் கொண்டு ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில், அரசு அடுத்த ஊதிய குழுவை அமைப்பது பற்றி அறிவிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒரு அறிவிப்பு வந்தால், அதன் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான அதிகரிப்பு ஏற்படலாம்.


8 ஆவது சம்பள கமிஷன் எப்போது வரும்


2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு, புதிய ஊதியக் குழு பற்றி விவாதம் தொடங்கப்படலாம். அதே நேரத்தில், ஊழியர் சங்கம் மற்றும் பல அமைப்புகளும் இதற்கான போராட்டங்களை நடத்தி வருகின்றன. சொல்லப்போனால் புதிய ஊதியக்குழு தொடர்பான போராட்டத்திற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன், இது குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசு தரப்பில் இருந்து, 8வது ஊதியக் குழுவில் இதுவரை எந்த முன்மொழிவும் இல்லை. இந்த சம்பள குழு தொடர்பாக மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ள போதிலும் அதற்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை. அதன் காலக்கெடு 2024 ஆம் ஆண்டில் தொடங்கும்.


மேலும் படிக்க | ரூ 1000 கோடி செலவில் 5% அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறது இந்த மாநில அரசு! 


அரசு புதிய ஊதியக் கட்டமைப்பை எப்போது அமல்படுத்தக்கூடும்? 


8வது ஊதியக் குழுவின் உருவாக்கம் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் செய்யப்படலாம். அதன் பிறகு இது அடுத்த ஆண்டில் செயல்படுத்தப்படலாம். இதன் பொருள் அதை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன என்பதாகும். இது நடந்தால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் மிகப்பெரிய அளவில் உயரும். 7வது ஊதியக் குழுவிற்குப் பிறகு, 8வது ஊதியக் குழுவில் பல மாற்றங்கள் இருக்கலாம். 


புதிய சம்பள கமிஷனுக்குப் பிறகு சம்பளம் மாறும்


7வது ஊதியக்குழு அமைக்கப்பட்ட பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. உண்மையில் ஃபிட்மென்ட் ஃபாக்டருக்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபார்முலாவின் அடிப்படையில், 8வது ஊதியக் குழுவின் ஃபிட்மென்ட் ஃபாக்டரிலும் மாற்றம் ஏற்பட்டால், குறைந்தபட்ச சம்பளம் 26 ஆயிரம் ரூபாயாக அதாவது 44.44 சதவீதம் உயரும். இதன்பின் கீழ்மட்ட ஊழியர்களுக்கு பணிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சம்பளம் வழங்கப்படுகிறது. மறுபுறம், அதிகபட்ச சம்பளம் கொண்ட ஊழியர்களின் திருத்தம் 3 ஆண்டுகள் வித்தியாசத்தில் இருக்கக்கூடும்.


10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமலுக்கு வருகிறது


2013ல், 7வது சம்பள கமிஷன் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2016-ம் ஆண்டு அது அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டது. தற்போது ஊழியர்களின் அதிர்ஷ்டம் மீண்டும் ஜொலிக்கப் போகிறது. புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி.. அரியர் தொகையில் வரி சலுகை பெறலாம்.. வழிமுறை இதோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ