7 ஆவது ஊதியக்கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. அவர்களுக்கு கூடிய விரைவில் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படவுள்ளது. அகவிலைப்படி அதிகரிப்பை தொடர்ந்து மற்றொரு கொடுப்பனவிலும் அவர்களுக்கு அதிகரிப்பு ஏற்படவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வீட்டு வாடகை கொடுப்பனவு
மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவு விரைவில் அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிகின்றன. எச்ஆர்ஏ எனப்படும் வீட்டு வாடகை கொடுப்பனவு, இதற்கு முன்னர் கடைசியாக ஜூலை 2021 இல் புதுப்பிக்கப்பட்டது. அப்போது அகவிலைப்படி 25% ஆக உயர்த்தப்பட்டது. இந்த வகையில், ஜனவரி 2023-க்கு பிறகு மீண்டும் வீட்டு வாடகை கொடுப்பனவில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து வெளிவந்துள்ள அறிக்கையின்படி, அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு விரைவில் அதிகரிக்கப்படலாம். இப்படி நடந்தால், ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு ஏற்படும். அரசு ஊழியர்களின் எச்ஆர்ஏ அவர்கள் பணிபுரியும் நகரத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் மூன்று வகைப்பாடுகள் உள்ளன: எக்ஸ், ஒய் மற்றும் இசட். தற்போது, இசட் பிரிவு தொழிலாளர்களுக்கு அவர்களின் அடிப்படை ஊதியத்தில் 9% எச்ஆர்ஏ வழங்கப்படுகின்றது.
அறிக்கைகள் கூறுவது என்ன?
அரசு ஊழியர்களுக்கான எச்ஆர்ஏ விரைவில் 3% வரை அதிகரிக்கக்கூடும் என அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. X-வகுப்பு நகரங்களில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு எச்ஆர்ஏ 3 சதவிகிதமும், Y-வகுப்பு நகரங்களில் உள்ளவர்களுக்கு 2 சதவிகிதமும் Z-வகுப்பு நகரங்களில் உள்ள ஊழியர்களுக்கு எச்ஆர்ஏ 1 சதவிகிதமும் அதிகரிக்கலாம் என யூகங்கள் உள்ளன.
மேலும் படிக்க | 7th Pay Commission: குஷியில் ஊழியர்கள்! அகவிலைப்படியில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம்!
7வது சம்பள கமிஷன்: டிஏ அதிகரிப்பு
ஜூலை மாத தொடக்கத்திலேயே மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் பரிசு கிடைத்துள்ளது. அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய ஒரு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. ஜூலை 2023ல் அரசு ஊழியர்கள் 46 சதவீத அகவிலைப்படி (டிஏ உயர்வு) பெறுவார்கள் என்பது இப்போது அதிகாரப்பூர்வமாக கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஊழியர்களுக்கு ஜூலை முதல் 42 சதவிகிததிற்கு பதிலாக 46 சதவிகிதத்தில் அகவிலைப்படி வழங்கப்படும்.
அகவிலைப்படியுடன், மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவும் உயரும். ஏனெனில், ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டியவுடன், எச்ஆர்ஏ -வும் திருத்தப்படும் என்றும் அரசாங்கம் ஏற்கனவே ஒரு அறிவிப்பில் கூறியுள்ளது. ஜூலை 2023 இல், அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதி.
HRA: வீட்டு வாடகை கொடுப்பனவு எப்போது அதிகரிக்கும்?
DoPT இன் மெமோராண்டத்தின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவில், அகவிலைப்படி உயர்வின் அடிப்படையில் திருத்தம் செய்யப்படுகிறது. நகரத்தின் வகையின்படி, எச்ஆர்ஏ 27 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. இந்த உயர்வு 1 ஜூலை 2021 முதலான அகவிலைப்படி உயர்வுடன் அமலில் உள்ளது. 2015 இல் வெளியிடப்பட்ட குறிப்பாணையின்படி, அகவிலைப்படியுடன் எச்ஆர்ஏ -வும் அவ்வப்போது திருத்தப்படும். இப்போது அகவிலைப்படி 50% -ஐத் தாண்டும்போது அந்த திருத்தம் மீண்டும் நடக்க வேண்டும்.
HRA அதிகரிப்பால் மொத்த தொகை எவ்வளவு அதிகரிக்கும்?
7வது சம்பள கமிஷன் மேட்ரிக்ஸின் படி, மத்திய அரசு ஊழியர்களின் அதிகபட்ச அடிப்படை சம்பளம் மாதத்திற்கு 56,900 ரூபாய் ஆகும். அதன் எச்ஆர்ஏ 27 சதவிகிதம் என்ற விகிதத்தில் கணக்கிடப்படுகிறது.
எளிமையான கணக்கீட்டின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம்:
HRA = ரூ 56,900 x 27/100 = ரூ 15,363/மாதம்
30% HRA = ரூ 56,900 x 30/100 = ரூ 17,070/மாதம்
HRA இல் மொத்த அதிகரிப்பு = ரூ 1,707/மாதம்
ஆண்டு HRA அதிகரிப்பு = ரூ 20,484
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ