வாழ்க்கையில் ‘இந்த’ 4 விஷயங்களுக்கு வெட்கப்படவே கூடாது!! ரத்தன் டாட்டா சொன்னது..
வாழ்வில் நாம் சில விஷயங்களை பார்த்து வெட்கப்படவே கூடாது. அவை குறித்து ரத்தன் டாட்டா பேசியிருக்கிறார்.
நான்கு விஷயங்களை ரத்தன் டாடா சிறுவயதிலிருந்து கடைப்பிடித்துள்ளதால் இன்றும் பெருமையுடன் உலகம் போற்றுகிறது.என்னென்ன விஷயங்கள் ரத்தன் டாடா கடைப்பிடித்தார் என்பதைக் கீழேப் படிப்போம்.
old clothes: நாம் அணிந்திருக்கும் ஆடை நம் திறனையும் அறிவையும் வெளிப்படுத்தாது.நம்முடைய ஆடைக்கு மதிப்பில்லை ஆனால் நம்மிடம் இருக்கும் திறமையின் மதிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று கூறினார்.ஒருவர் ஆடையை வைத்து யாரும் தவறாக மதிப்பிடக் கூடாது.ஒருவரின் திறமையைப் பார்த்துத்தான் மதிப்பிட வேண்டும் என்று ரத்தன் டாடா கூறினார். டாடாக் குழுமத்தின் ஒருவராக இருப்பவர் ரத்தன் டாடா இவர் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்த விஷயங்கள் இவரை உலகளவில் இன்றும் பெருமைப்படுத்தி வருகிறது. இவர் மறைந்தாலும் இவரது நினைவு இவ்வுலகில் மறையாது. இந்த உலகத்தில் பிறப்பு இறப்பு இவ்விரண்டும் நாம் அனைவரும் சந்திக்க நேரிடும், அந்த சந்திப்பு வரும் வரை நம் திறமையை முடிந்த அளவிற்கு இந்த உலகத்திற்குக் கொடுக்க வேண்டும் என எண்ணிய மாபெரும் மனிதர் என்றே கூறலாம்,இவரின் தீராத உழைப்பை மக்களுக்கு விட்டுச் சென்றார்.பழைய ஆடையை அணிய வெக்கபடுவதற்க்கு ஒன்றுமில்லை,ஆடை ஏதோ ஒரு ஆடை ஆனால் ஆடை ஒன்றுதான் என்று கூறினார்.
மேலும் படிக்க:Ratan Tata Family Tree | நுசர்வாஞ்சி டாடா முதல் நோயல் டாடா வரை... ரத்தன் டாடா குடும்பத்தின் முழு பட்டியல்
poor friends: நண்பர்களைத் தேர்ந்தெடுக்க தகுதி தேவையில்லை ஏழையாக இருந்தாலும் அன்பு ஒரே இடத்திலிருந்துதான் வரும் என்று ரத்தன் டாடாக் கூறினார். நல்ல நண்பர் ஏழையாகக் கூட இருக்கலாம் அதற்கு வெட்கப்பட அவசியமில்லை. நண்பரில் தகுதிப்பார்த்து தேர்ந்தெடுப்பவர்கள் நல்ல நண்பர்களாக மாறிவிட முடியாது.அதே தகுதிப்பார்க்காமல் நண்பர்களாக ஏற்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டார்கள்.அன்பு தகுதிப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதில் இல்லை. நல்ல மனதைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதில் உள்ளது,இதற்கு நாம் வெட்கப்பட்டால் நட்பிற்குரிய மரியாதை அந்த இடத்தில் நாம் இழந்துவிவோம்.
old parents: நாம் வளர்ந்த பிறகு நம் பெற்றோர்களை மதிப்பதை ஒருபோதும் தவறவிடக்கூடாது.அதற்கு வெக்கபட அவசியமில்லை, வயதானாலும் பெற்றோர்களின் அன்பு எப்படி ஒரே இடத்தில் கிடைக்கிறதோ அதே நாம் அவர்கள் வயதான பிறகும் நாம் கொடுக்க வேண்டும்,இந்த உலகில் நல்ல நிலைமையில் இருப்பதற்குக் காரணம் அவர்கள் மட்டும்தான்,அவர்கள் இல்லையென்றால் நாம் இந்த உலகத்தில் இல்லை,பெற்றோர்களை கலங்கடிக்கவோ அவர்கள் மனம் புண்படும் விதத்தில் நடந்துகொள்வதோ செய்யக் கூடாது.நாம் பெரியவர்கள் ஆனதும் தன்னுடைய தாய்,தந்தையை மதிக்கத் தவறிவிடுகிறோம்.பெற்றோர்களுக்கு வயதானதும் அடைக்கலக் காப்பகத்தில் விட்டுச் செல்கிறோம்.அவர்களின் மனம் எந்த அளவிற்குப் புண்படும் என நினைத்துப்பார்பதில்லை.பெற்றோர்கள் வயதானாலும் தன் பிள்ளைகள் நம்மை பார்த்துக்கொள்வார்கள் என நினைத்துத்தான் நம்மைப் பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வளர்க்கிறார்கள்.அதைத் தவறாகப் பயன்படுத்தி வயதான பெற்றோர்களைக் காயப்படுத்தக்கூடாது.
simple living: நம் வாழ்க்கை எளிமையாக வாழ்கிறோம் என்று வேதனைப்படவோ வெட்க படவோ தேவையில்லை.எளிமையான வாழ்க்கையிலும் சந்தோஷம் காண முடியும்.வாழ்க்கை எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம்,அந்த வாழ்க்கை எளிமையாகக்கூட இருக்கலாம், இதுவே அந்த வாழ்க்கையை சந்தோஷமாக ஏற்று வாழ்ந்தால் வெட்கம் மறைந்துவிடும் என்று ரத்தன் டாடா மிக அழகா கூறியது நம் அனைவருக்கும் ஒரு ரோல் மாடலாக ரத்தன் டாடா இருக்கிறார்.இதற்குக் காரணம் இவர் வாழ்க்கையில் கடைப்பிடித்த செயல்கள் மட்டும்தான் இவரை இன்றும் இந்த உலகம் பெருமையுடன் பேசுகிறது.
மேலும் படிக்க:Ratan Tata Achievements | டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா செய்த சாதனைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ