இன்றைய கால கட்டத்தில், குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு அதிக செலவு ஏற்படுகிறது. பணப்பற்றாக்குறையால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல உயர்கல்வி கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர். குழந்தைகள் பிறந்தவுடனேயே பணத்தைச் சேமிக்கத் தொடங்குவதே சிறந்த தீர்வு. மகள்களைப் பற்றி குறிப்பிடுகையில், இதற்கு அரசாங்கத்திடம் மிகச் சிறந்த திட்டம் உள்ளது. அதன் பெயர் சுகன்யா சம்ரித்தி யோஜனா. செல்வ மகள் சேமிப்பு திட்டம் எனவும் கூறப்படும் திட்டம் மிகவும் பிரபலமானது. இந்தத் திட்டத்தில் உங்கள் மகளின் பெயரில் கணக்கைத் தொடக்கலாம். இந்தக் கணக்கில் சிறிய அளவில் முதலீடுகளைச் செய்யலாம், இது நீண்ட காலத்திற்கு பெரிய நிதியாக வளரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட்டி கிடைக்கும்


சுகன்யா சம்ரித்தி யோஜனா ஒரு சிறு சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அரசாங்கம் நிர்ணயம் செய்கிறது. ஜூலை முதல் செப்டம்பர் 2023 வரையிலான காலாண்டில், சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY வட்டி விகிதங்கள்) வட்டி விகிதத்தில் அரசாங்கம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இந்த நேரத்தில் நீங்கள் இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 8 சதவிகிதம் வட்டியைப் பெறுவீர்கள்.


கணக்கை எப்போது திறக்க வேண்டும்


மகள் பிறந்தவுடன், அவரது சுகன்யா சம்ரித்தி கணக்கு (SSY கணக்கு) திறக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தில் உங்கள் மகளின் கணக்கை 10 வயது வரை திறக்கலாம். ஒரு முதலீட்டாளர் தனது மகள் பிறந்த உடனேயே திட்டத்தில் கணக்கைத் தொடங்கினால், அவர் தனது பங்களிப்பை 15 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யலாம். பெண்ணுக்கு 18 வயதாகும்போது முதிர்வுத் தொகையில் 50% திரும்பப் பெறலாம். மீதமுள்ள தொகையை பெண் குழந்தைக்கு 21 வயதாகும்போது திரும்பப் பெறலாம்.


உங்கள் மகளுக்கு 64 லட்சம் கிடைக்கும்


சுகன்யா சம்ரித்தி யோஜனா உங்கள் மகளை பணக்காரராக்கும். சுகன்யா சம்ரித்தி கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 டெபாசிட் செய்தால், ஒரு வருடத்தில் இந்தத் தொகை ரூ.1.5 லட்சமாக இருக்கும். இந்தத் தொகைக்கு வரி கிடையாது. நாம் முதிர்ச்சியின் போது 7.6% வட்டி விகிதம் என கணக்கிட்டால், முதலீட்டாளர் தனது மகளுக்கு முதிர்வு காலத்தில் ஒரு பெரிய நிதியை உருவாக்குவார். முதலீட்டாளர் தனது மகளுக்கு 21 வயதாகும் போது முழுத் தொகையையும் திரும்பப் பெற்றால், முதிர்வுத் தொகை ரூ.63 லட்சத்து 79 ஆயிரத்து 634 ஆக இருக்கும். இதில் முதலீடு செய்யப்படும் தொகை ரூ.22,50,000. அதேசமயம், வட்டி வருமானம் ரூ.41,29,634 ஆக இருக்கும். இப்படி ஒவ்வொரு மாதமும் 12,500 ரூபாய் சுகன்யா சம்ரித்தி கணக்கில் டெபாசிட் செய்தால், மகளுக்கு 21 வயதாகும் போது சுமார் 64 லட்சம் ரூபாய் கிடைக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் ஜாலிதான்.... அதிரடி டிஏ ஹைக் நிச்சயம்.. உற்சாகத்தில் ஊழியர்கள்


வரியையும் மிச்சப்படுத்தும் SSY திட்டம் 


SSY திட்டத்தில் ஒரு வருடத்தில் 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தால் வருமான வரி விலக்கு பலன் கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். சுகன்யா சம்ரித்தி யோஜனா EEE அந்தஸ்துடன் வருகிறது. அதாவது மூன்று இடங்களில் வரிவிலக்கு உண்டு. சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வரி விலக்கு கிடைக்கும். இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வட்டிக்கும் வரி விலக்கு உண்டு. இது தவிர, இந்தத் திட்டத்தில் முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு உண்டு.


மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் 50% டிஏ, அதன் பிறகு 8வது ஊதியக்குழு... மொத்தத்தில் பண மழை!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ